ரூ.14 ஆயிரம் உதவித்தொகை ஒன்றிய நிறுவனத்தில் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

ரூ.14 ஆயிரம் உதவித்தொகை ஒன்றிய நிறுவனத்தில் பணி


ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் ரூ.14 ஆயிரம் உதவித்தொகையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  

ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ரயில் இந்தியா தொழில் நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம்(Rail India Technical And Economic Service Limited) உள்ளது.  

இதில் தற்போது  மொத்தம் 91 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி Graduate பிரிவில் பொறியியல் பிரிவில் 57, பொறியியல் அல்லாத பிரிவில் 15 என 72 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதுதவிர 

Diploma பிரிவில் 10, Trade HKM™ பிரிவில் 9 என மொத்தம் 91 பணியிடங்கள்  Apprentices  முறையில் நிரப்பப்பட உள்ளது.   

Graduate பொறியியல் பிரிவில் பணியாற்ற விரும்புவோர் பிஇ, பிடெக் படிப்பையும், Graduate பொறியியல் அல்லாத பிரிவில் பணியாற்று விரும்புவோர் பிஏ, பிபிஏ, பிகாம் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். Diploma பிரிவினர் டிப்ளமோ பொறியியல் படிப்பை முடித்திருக்க வேண்டும். Trade பிரிவு விண்ணப்பதாரர்கள் அய்டிஅய் படிப்பை முடித்திருக்க வேண்டும். 

 Apprentices முறை என்பதால் ஒவ்வொரு பணிக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி  Graduate பிரிவினருக்கு மாதம் ரூ.14 ஆயிரம், டிப்ளமோ பிரிவினருக்கு ரூ.12 ஆயிரம், Trade பிரிவினருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். விண்ணப்பம் செய்வது எப்படி? என்ஜினீயரிங், பிடெக் முடித்தவர்கள் தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தில் (NATS) www.mhrdnats.gov.in  இணையதளத்திலும், அய்டிஅய் தேர்ச்சி அல்லது பட்டதாரி பிஏ, பிபிஏ/பி காம் தேர்ச்சி பெற்றவர்கள் தேசிய பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் (NAPS) www.apprenticeshipindia.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 

அதன்பிறகு யூசர் அய்டி, பாஸ்வேர்டு பயன்படுத்தி நுழைந்து ESTABLISHMENT REQUEST என்பதை கிளிக் செய்து Find Establishment  என்பதை கிளிக் செய்து  RITES Ltd  என்பதை கிளிக் செய்து "Apply"  செய்ய வேண்டும். 

விண்ணப்பம் செய்ய 31.07.2022 என்பது கடைசிநாளாகும்.  இவ்வாறு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

No comments:

Post a Comment