40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

கடலூர் மாவட்டம் சார்பில் 2000 விடுதலை சந்தாக்கள் வழங்கிட முடிவு  
கடலூர், ஜூலை 2- கடலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் (30.6.2022) வியாழன் மாலை ஆறு மணி அளவில் கழகப் பொதுச் செயலா ளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமை யில் மாவட்ட தலைவர் தண்டபாணி, மண்டல இளைஞர் அணி செயலாளர் பஞ்சமூர்த்தி முன்னிலையில் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் உதயசங்கர் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வேலு, அமைப்பாளர் ராமநாதன், துணை பேராசிரியர் கலைச்செல்வன், திராவிட மணி, கோபால கிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 
தீர்மானம் 1. தமிழர் தலைவர் ஆசிரியரின் 60 ஆண்டு கால விடுதலை ஆசிரியர் பணியை பாராட்டி கடலூர் மாவட்ட சார்பில் 2000 சந்தாக்கள் வழங்குவது எனவும்
தீர்மானம் 2  அரியலூரில் ஜூலை 30 நடைபெறும் மாநில இளைஞரணி மாநாட்டில் 10 தனி ஊர்திகளில் தோழர்கள் சென்று பங்கேற்பது எனவும் மாநாட்டை விளக்கியும் சந்தா சேர்க்கையை வலியுறுத்தியும் சுவர் விளம்பரம் செய்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய தி.க தலைவர் கனகராஜ் நன்றி கூறினார்.
********
விழுப்புரம் மாவட்டத்தில்  ‘விடுதலை' சந்தா சேர்ப்பு பணி தொடக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி பகுதியில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் விடுதலை சந்தா சேர்ப்பு பணிகளைத் தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன், அமைப்பாளர் சே.வ.கோபண்ணா, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் துரை.திருநாவுக்கரசு, மேல்ஒலக்கூர் 
க.அறிவுடைநம்பி, கம்மந்தூர் அண்ணாமலை ஆகியோர் சந்தா ரசீது புத்தகங்களைப் பெற்றுக்கொண்டனர். பழங்குடி மக்கள் முன்னணி நிறுவனர் சுடரொளி என்.சுந்தரம் உடனிருந்தார்.
******
அமைச்சர் மனிதநேயர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களிடம் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை சந்தா சேர்ப்பு
விடுதலை சந்தா சேர்ப்புப் பணியின் போது செஞ்சியில் 1.72022 அன்று மாலை 5 மணிக்கு  கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திர சேகரன், மாவட்ட தலைவர் சுப்பராயன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் திருநாவுக்கரசு, சுடரொளி சுந்தரம் ஆகியோர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களை சந்தித்து பேசினர். அமைச்சர் அவர்கள் 100 விடுதலை சந்தா ரசீதுகளை பெற்றுக் கொண்டார். ஆவன செய்வதாக மகிழ்வுடன் கூறினார்.
*******
மேட்டூர் கழக மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேர்க்கும் பணி தொடங்கியது
********
திருவாரூர் கழக மாவட்டத்தில் ‘விடுதலை' சந்தா சேர்க்கும் பணி தொடங்கியது








No comments:

Post a Comment