உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 2, 2022

உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

மும்பை,ஜூலை 2 ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அளித்த வாக்குறுதியை காப்பாற்றியிருந்தால் மகா விகாஸ் அகாடி கூட்டணி உருவாகி இருக்காது என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராட்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு (மகா விகாஸ் அகாடி) கடந்த 29-ஆம் தேதி கவிழ்ந்தது. பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து 30.6.2022 அன்று புதிய கூட்டணி அரசை அமைத்தன. சிவசேனா அதி ருப்தி அணித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே மாநிலத்தின் முதலமைச்ச ராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.

இந்த சூழலில் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2019ஆ-ம் ஆண்டு மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெற்றது. அப்போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித் ஷா, பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ள வாக்குறுதி அளித்தார். இதன்படி முதல் 2.5 ஆண்டுகள் சிவசேனாவும் அதன்பிறகு பாஜகவும் முதலமைச்சர் பதவியை ஏற்க முடிவு செய்யப்பட்டது.

தேர்தலுக்குப் பிறகு அமித் ஷா அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வில்லை. அவர் தனது வாக்குறுதியை காப்பாற்றியிருந்தால் மகா விகாஸ் அகாடி கூட்டணி உருவாகி இருக் காது. பாஜக, சிவசேனா கூட்டணி அரசு ஆட்சி நடத்தி, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக முதலமைச்சர் பதவியேற்று இருப்பார்.

ஆனால் இப்போது என்ன நடந் திருக்கிறது? இந்த முறை பாஜகவை சேர்ந்த யாரும் முதலமைச்சர் பதவியை ஏற்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. புதிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, நிச்சயமாக சிவ சேனா முதலமைச்சர் கிடையாது. பாஜகவுக்கு என்ன மகிழ்ச்சி கிடைத் திருக்கிறது என்பது புரியவில்லை.

என்னை முதுகில் குத்தியது போன்று மும்பையின் முதுகில் குத்த வேண்டாம் என்று புதிய முதல மைச்சரை கேட்டுக் கொள்கிறேன். மும்பையின் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் பணி மனையை காஞ்சூர்மார்குக்கு மாற்றினோம். இதனை வனப் பகுதியான ஆரேவுக்கு மாற்றும் முடிவு தவறானது. மும்பையின் சுற்றுச்சூழலை சீர் குலைக்க வேண்டாம்.

ஆட்சி, அதிகாரம் நிலையற்றது. ஆனால் மக்களின் அன்பு நிலையானது. நான் பதவிவிலகிய போது மகா ராட்டிர மக்கள் கண்ணீர் சிந்தினர். இதுதான் சிவசேனாவின் பலம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment