நாடாளுமன்ற கூட்ட தொடர் இன்று ஆரம்பம்: 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

நாடாளுமன்ற கூட்ட தொடர் இன்று ஆரம்பம்: 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்

புதுடில்லி, ஜூலை 18 நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத்தொடர் இன்று (18.7.2022) தொடங்குகிறது. இதில் 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளது. பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை, அக்னிபாதை திட்டம், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர், இன்று தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த கூட்டத் தொடரில் கன்டோன்மென்ட் மசோதா, மாநிலங்களின் கூட்டுறவு சொசைட்டிகள் மசோதா, காபி மேம்பாடு மசோதா, தொழில்நிறுவன வளர்ச்சி மற்றும் சேவை மய்யங்கள் மசோதா, சரக்குகளுக்கான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்பு திருத்த மசோதா, சேமிப்பு கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதா உட்பட 24 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.

இதுதவிர சத்தீஷ்கர் மற்றும் தமிழ்நாட்டு எஸ்.சி., எஸ்.டி., பட்டியலை மாற்றியமைப்பதற்கான அரசியல் சாசன திருத்தத்துக்கு இரண்டு தனி மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட வுள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 8 மசோதாக்கள் ஏற்கெனவே நிலுவை யில் உள்ளன. அவற்றையும் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும். மேலும், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலும் இந்த கூட்டத் தொடரில் நடைபெறவுள்ளது.


No comments:

Post a Comment