பி.வி.சிந்து, குகேஷ், பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 18, 2022

பி.வி.சிந்து, குகேஷ், பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜூலை.18 சிங்கப்பூர், பாரீஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த பி.வி.சிந்து, குகேஷ், பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- 

தனது முதல் சிங்கப்பூர் ஓபன் வெற்றியை பதிவு செய்துள்ள நமது ஊக்கமிகு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு எனது பாராட்டுகள். இதே ஆற்றலோ டும், உத்வேகத்தோடும் பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளிலும் விளையாட வாழ்த்துகிறேன். அடிவ £னத்தில் ஒரு புதிய விண்மீனாக தோன்றியுள்ளார், கிராண்ட்மாஸ்டர் குகேஷ். செஸ் விளையாட்டில் 2700 இ.எல்.ஓ. தரப்புள்ளிகள் என்ற சிறப்பான மைல்கல்லை அவர் அடைந்திருக்கிறார். இது மிகவும் அரிய சாதனை. எதிர்காலத்தில் சென்னையை சேர்ந்த இளம் வீரரான குகேஷிடம் இருந்து இன்னும் பல வியத்தகு சாதனை களை நாம் காணப்போகிறோம். அதற்கு எனது வாழ்த் துகள். பாரீசின் ஓபன் செஸ் தொடரில் அபாரமான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வென்றுள்ள பிரக்ஞானந் தாவுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள் கிறேன். 2 இளம் கிராண்ட்மாஸ்டர்களும் எதிர்வரும் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாழ்த் துகிறேன் என அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment