சிதம்பரம் நடராஜர் கோவில் துப்புரவு பணியாளரின் ஏடிஎம் அட்டைமூலம் திருடிய பார்ப்பனர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 28, 2022

சிதம்பரம் நடராஜர் கோவில் துப்புரவு பணியாளரின் ஏடிஎம் அட்டைமூலம் திருடிய பார்ப்பனர் கைது

கடலூர்,ஜூன்28-: சிதம்பரம் நடராஜர் கோயிலில் துப்புரவுத் தொழிலாளி விஜயா. இவர் தன்னுடைய வங்கிக்கணக்குக்கான ஏடிஎம் அட்டையையும், அதன் ரகசிய எண்ணையும் குறித்து வைத்திருந்த சுருக்குப்பையை கோயிலில் பணியின் போது தொலைத்துவிட்டார். அந்த சுருக்குப்பையை கண்டெடுத்த புரோகித பார்ப்பனர் ரூ.25ஆயிரம் பணத்தை திருடி காவல்துறையினரிடம் பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் துப்புரவு பணியாளராக பணியாற்றுபவர் சிதம்பரம் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மனைவி விஜயா (வயது 50). இவர் தனது சுருக்குப் பையை ரகசிய எண்ணுடன் கூடிய ஏடிஎம் கார்டுடன் கடந்த ஜூன் 9ஆம் தேதி கோயிலில் வேலை செய்யும் போது தொலைத்து விட்டார்.

தனது சுருக்குப்பையை கோயிலில் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. அதேநேரத்தில் அவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.25ஆயிரம் தொகை ஏடிஎம் அட்டையைப்பயன்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. 

சுருக்குப்பை தொலைந்த அன்றைய தினமே அவரது வங்கி கணக்கிலிருந்து ஏடிஎம் அட்டைமூலமாக ரூ25 ஆயிரம் எடுக்கப்பட்டதுகுறித்து விஜயா சிதம் பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வங்கி ஏடிஎம் மய்யத்தில் அமைக்கப் பட்டி ருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

காவல்துறையினர் விசாரணையில் அந்த பணத்தை திருடியது சிதம்பரம் கீழபுதுத்தெருவைச் புரோகிதம் செய் யும் சீனுவாசன் மகன் அமிர்தகடேஸ்வர அய்யர் என்பது தெரியவந்து. காவல் துறையினர் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.25ஆயிரம் ரொக் கம், இருசக்கர வாகனத்தையும் கைப் பற்றினர். மேலும் சிதம்பரம் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அமிர்தகடேஸ்வர அய்யரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் பணத்தை இழந்த விஜயாவை வரவழைத்து அவர் இழந்த பணத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்தனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு விஜயா கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

No comments:

Post a Comment