ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 22, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி மர்மு, எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 22.6.2022

* பணி முடிக்கும் அக்னிவீரர்களுக்கான கல்வித் திட்டம் ஆபத்தான முறையில் தெளிவற்றதாக உள்ளது. இது அக்னிவீரர்களின் திறன்கள் மற்றும் உந்துதல் மற்றும் அவர்களின் எதிர்காலத்திற்கான மோசமான ஏற்பாட்டாக இருக்கும் என சுகந்தா சவுத்ரி கருத்து.

தி இந்து

* ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 70,000 பணியிடங்களை நிரப்ப எஸ்.எஸ்.சி முடிவு.

தி டெலிகிராப்:

* உத்தரபிரதேசம்: புல்டோசர் மூலம் வீடு இடிப்பு; இது தற்செயலான வன்முறைச் செயல்களுக்கு அப்பாற்பட்டதாகத் தெரிகிறது என்று இந்திய அரசுக்கு நாங்கள் கவலை தெரிவித்துள்ளோம் என அய். நா. சார்பில் கடிதம்.

* என்.சி.ஆர்.டி.யின்  பாடப்புத்தகங்களில் வரலாற்றை நீக்குதல்கள் மூலம், ஜனநாயகத்தை உருவாக்குவது பற்றியோ அல்லது சிப்கோ போன்ற மக்கள் இயக்கங்கள் பற்றியோ மாணவர்கள் கற்றுக் கொள்ளாமல் இருப்பதை பள்ளிகள் உறுதி செய்யும்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment