ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்திட மோடி அரசு முடிவு.

* ‘லிவ்-இன்’ உறவுக்கு பிறந்த குழந்தைகளுக்கு சொத்துரிமை உண்டு, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* எதிர்க்கட்சிகள் சார்பாக குடியரசுத் தலைவர் வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்திட முயற்சி.

* 2023க்குள் கல்வி பணியிடங்களை நிரப்புவோம் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார்

தி டெலிகிராப்:

* பத்து லட்சம் வேலை வழங்கிட முடிவு செய்ததற்கு நன்றி. ஆனால் 1 கோடி காலியிடங்களை நிரப்பவும் என பிரதமர் மோடிக்கு வருண் காந்தி,எம்.பி. வேண்டுகோள்.

* உயர்தர வாழ்க்கை, சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகள் பெற இந்தியாவை விட்டு வெளியேற 8000 கோடீஸ்வரர்கள் முடிவு என செய்தி.

* உ.பி.யில் யோகி அரசு நடத்தி வரும் புல்டோசர் அரசியலை கட்டுப்படுத்துமாறு தலைமை நீதிபதிக்கு மேனாள் நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மார்ச் 2020 நிலவரப்படி, ஒன்றிய அமைச்சகங்களில் 8.7 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக மோடி அரசு நாடாளுமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.

* ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு அறிவிப்பு, மோடி அரசின் முந்தைய ‘ஜூம்லா’ அல்ல; இது ‘மஹா ஜும்லா” என ராகுல் காந்தி கிண்டல்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment