முதன்மையான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 6, 2022

முதன்மையான தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை, ஜூன் 6- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சி சிறப்பாக நடைபெறுகின்றது என்று மகத்தான ஆதரவை பொது மக்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாட்டின் முதன்மை யானத் தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடத்தில் இருப்பதாக "புதிய தலைமுறை" தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. ஓராண் டில் தி.மு.க. ஆட்சி குறித்த கருத் துக்கணிப்பை புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தி வெளியிட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு 10-இல் எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, 59 விழுக்காட்டுக்கும் அதிகமா னோர் 6 முதல் 10 மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் முக்கியத் தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு ஆதரவாக 49.10 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். முதன்மைத் தலைவர்களில் முதலிடத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, 18 முதல் 25 வயதுடையோரில் 54.41 விழுக்காட்டினரும், 26 முதல் 35 வயதுடை யோரில் 50.56 விழுக் காட்டினரும் வாக்களித்துள்ளனர். 36 முதல் 50 வயதுடையோரில் 56.17 விழுக்காட்டினரும், 51 முதல் 65 வயதுடையோரில் 58.18 விழுக் காட்டினரும், 65 வயதுக்கு மேற்பட் டோரில் 59.64 விழுக்காட்டின ரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.மு.க. அரசின் பலம் என்ன? என்ற கேள்விக்கு மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், 4 ஆயிரம் ரூபாய் கரோனா  நிவார ணம், 5 சவரன் நகைக்கடன் தள் ளுபடி, முதல் வரின் கடின உழைப் பும் - எளிதாக அணுகும் வாய்ப்பும் என்று கூறியவர்கள் மேலும், ஊழல் புகார்கள் இல்லாமை, இல்லம் தேடி மருத்துவம் திட்டம் போன்றவற்றிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கரோனா  பேரி டரை தி.மு.க. அரசு எப்படிக் கையாண்டது? என்ற கேள்விக்கு சிறப்பாக கையாண்டது என பெரும்பான்மையான மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்று "புதிய தலைமுறை" தொலைக் காட்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment