ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 17, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

ஒப்பந்த அடிப்படையில் ராணுவ வேலைக்கான அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு - வடமாநிலங்களில் போராட்டம் வெடித்தது: பீகாரில் ரயில்களுக்கு தீ வைப்பு; அரியானாவில் துப்பாக்கிச்சூடு.

 உ.பி.யில் புல்டோசார்மூலம் வீடுகள் இடிப்பு விவகாரம்: சட்டத்தைப் பின்பற்ற அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

மாநிலங்களுக்கிடையேயான கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்திட வேண்டுமென்று வலியுறுத்தி,  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ராகுல் காந்திக்கு அமலாக்க இயக்கு நரகம் அழைப்பாணை அனுப்பியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்ததற்கு மாற்றாக உ.பி.யில் புல்டோசர் அரசியலை எதிர்த்து காங்கிரஸ் போராடியிருக்க வேண்டும் என பத்திரிக்கையாளர் சுகாஸ் பல்சிகார் கருத்து தெரிவித்துள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

ஜேடி-யு நாடாளுமன்றக் குழுத் தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா வியாழனன்று, 'அக்னிபாத்' திட்டம் குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

தி டெலிகிராப்:

நேர்காணல் நடைபெற்று பல மாதங்கள் ஆகியும்,  எட்டு அய்அய்டிகளுக்கு இயக்குநர்களை மோடி அரசு இன்னமும் நியமனம் செய்யாததற்கு, காவி சித்தாந்தந்திற்கு இணங்கும் அதிகாரிகள் கிடைக்கவில்லையோ என பலரும் சந்தேகிக்கின்றனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

அக்னிபாத் திட்டம் இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என பாஜக எம்.பி. வருண் காந்தி ராஜ்நாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment