ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 21, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மோடி அரசின் அக்னி பாத் திட்டம், நான்காண்டு லாலி பாப் திட்டம் என மம்தா சாடல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒன்றிய அரசின் பாடத்திட்ட குழுவில் சுதேசி ஜாக்ரன் மஞ்சின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் முதல் வித்யா பாரதியின் தலைவர் வரை, ஆர்எஸ்எஸ் தொடர்புகளைக் கொண்ட 24 உறுப்பினர்கள் உள்ள னர் என தி இந்தியன் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

* மத்திய சிவில் சேவைகள் மற்றும் பதவிகளில் முன்னாள் ராணுவ வீரர்களின் பிரதிநிதித்துவத்தை அதி கரிப்பது குறித்து விவாதிக்க, முன்னாள் ராணுவத்தினர் நலச் செயலாளர் தலைமையில் ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், 77 ஒன்றிய அரசுத் துறைகளில் 48 அதிகாரிகள் (62 சதவீதம்) கலந்து கொள்ளவில்லை.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment