ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 20, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

தெலுங்கானாவில் ரூ.40,000 கோடி நில மதிப்பினைக் கொண்ட ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை மோடி அரசு விற்பதை அனுமதிக்க மாட்டோம் என தொழில் துறை அமைச்சர் கே.டி.ராமராவ் திட்டவட்டம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பரவுகிறது. போராட்டங்கள் தொடர்கின்றன; 350க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

றீ தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (ழிசிணிஸிஜி) தனது சமீபத்திய "பகுத்தறிவு" பயிற்சியின் கீழ் பாடப்புத்தகங்களில் செய்த பெரும் மாற்றங்களில் இஸ்லா மிய ஆட்சியாளர்களின் வரலாறுகள் நீக்கப்பட்டுள்ளன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

அக்னிபாத்திற்கு பின்னால் ஆர்எஸ்எஸ்-ன் மறை முக செயல்திட்டம் உள்ளதா? என்று தேஜஸ்வி யாதவ் பிரதமர் மோடிக்கு கேள்வி.

தி டெலிகிராப்:

குறுகிய கால அக்னிபாத் தேர்வாளர்களுக்கு "ஓட்டுநர்கள், சலவை செய்பவர்கள்" திறன் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறியுள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வார்கியா கட்சி அலுவலகத்திற்கு "காவலர்களை" பணியமர்த்தும்போது அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

தமிழ்நாட்டில் திராவிட அரசியல், பரந்த பங்கேற்புக்கான பொது இடத்தை ஜனநாயகப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு இடஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு தனியார் துறையில் இடஒதுக்கீடு தொடர வேண்டும் என பேராசிரியர் வெங்கட நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment