மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு டெல்டா மாவட்டங்களில் ஜூன் 22இல் ஆர்ப்பாட்டம் விவசாய சங்கங்கள் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 20, 2022

மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு டெல்டா மாவட்டங்களில் ஜூன் 22இல் ஆர்ப்பாட்டம் விவசாய சங்கங்கள் அறிவிப்பு

சென்னை, ஜூன் 20- காவிரியின் குறுக்கே மேகதா துவில் கருநாடக மாநிலம் அணை கட்டத் திட்ட மிட்டிருப்பதைக் கண் டித்து டெல்டா மாவட் டங்களில் வரும் 22ஆ-ம் தேதி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்றுவிவசாய சங் கங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பெ.சண்முகம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செய லர் (பாலன் இல்லம்) என்.பெரியசாமி, அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் வி. அமிர்தலிங்கம் உள்ளிட் டோர் வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:

கருநாடகத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச் சர்கள் அம்மாநிலத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால்தான், மேக தாது அணை கட்டுமா னத் திட்ட அறிக்கை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சகம்அனுமதி கொடுத்துள்ளது.

காவிரி நதிநீர் ஆய்வு என்ற பெயரில் தமிழ்நாட் டுக்கே வந்து, மேகதாது அணை தொடர்பாக கரு நாடகம் கொடுத்துள்ள வரைவுஅறிக்கை கூட்டத் தில் விவாதத்துக்கு எடுத் துக் கொள்ளப்படும் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளது கண்டனத்துக்குரியது.

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக் கப்படும் என்று தெரிவித் துள்ள ஆணையத் தலை வரைக் கண்டித்தும், வரும் 23-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகதாது அணை குறித்த விவாதப் பொருளை நீக்கஅவசர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் 22-ஆம் தேதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட் டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத் தலை நகரங்களில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. இவ் வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment