ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மோடி அரசு அறிவித்ததுபோல் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை அளித்திட உடனடி நடவடிக்கை தேவை; தலையங்கம்.

 டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்டு கல்விக் கொள்கை குழு முதல்வருடன் பேச்சு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மோடி அரசின் அக்னி வீர் நெருப்போடு விளை யாடும் திட்டம் என்கிறார் எழுத்தாளர் பிரதாப் பானு மேத்தா.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அக்னிபாத் மீதான அரசியல் பின்னடைவு, ஜாக்கிரதையுடன் தொடருமாறு மூத்த வீரர்கள் அறிவுறுத்தல்; இந்தியா முழுவதும், குறிப்பாக பீகாரில் இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

* கல்வி வளர்ச்சி இருந்தபோதிலும், தமிழ்நாட்டின் யு.பி.எஸ்.சி.-2021 முடிவு 10 ஆண்டுகளில் மிக மோசமாக உள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 685 பேரில் 27 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

தி டெலிகிராப்:

* அக்னிபாத் திட்டம்: ஒன்றிய அரசின் முடிவால் பீகாரில் வீதி மறியல் வெடித்தது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடங்கள் மற்றும் சாலைகளை மறித்து, டயர்கள் மற்றும் உருவ பொம்மைகளை எரித்தனர், கற்களை வீசி எறிந்தனர், விளம்பர பலகை களை சேதப்படுத்தினர் மற்றும் திட்டத்திற்கான முழுப் பக்க செய்தித்தாள் விளம்பரங்களை கிழித்தெறிந்தனர்.

* மோடி அரசின் வெற்று உறுதிமொழி என நரேந்திர மோடியின் பத்து லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்த தலையங்கம்

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அக்னிவீரர்களுக்கான சிறப்பு 3 ஆண்டு பட்டப் படிப்பை கல்வி அமைச்சகம் கொண்டு வர உள்ளது.

* ஸ்மார்த்த பிராமணர்கள் சிறுபான்மை தகுதிக்கு தகுதியற்றவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..

 - குடந்தை கருணா


No comments:

Post a Comment