வீடுகள் தரைமட்டம்: உ.பி. அரசு அடக்குமுறையை உச்ச நீதிமன்றம் தடுக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

வீடுகள் தரைமட்டம்: உ.பி. அரசு அடக்குமுறையை உச்ச நீதிமன்றம் தடுக்க வேண்டும்

மேனாள் உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள் கோரிக்கை

புதுடில்லி. ஜூன் 15-  உத்தரப் பிரதேச மாநிலத்தில் அண் மையில் நடைபெற்ற கல வரத்தைத் தொடர்ந்து அந்த மாநில அரசு மேற் கொண்டு வரும் அடக்கு முறை நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண் டும் என்று உச்ச நீதி மன்றத்திடம் மேனாள் உச்ச, உயர் நீதிமன்ற நீதி பதிகள் மற்றும் மூத்த வழக் குரைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேனாள் நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்குரை ஞர்கள் கூட்டாக எழு திய கடிதத்தில், பாஜக பிரமுகர்களின் இஸ்லா முக்கு எதிரான சர்ச்சைக் குரிய கருத்துகளைத் தொடர்ந்து அக்கட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு காரணகர்த்தா எனக் கூறி இந்திய வெல்ஃபேர் பார்ட்டி தலைவர் ஜாவீத் முகமது வீட்டை பிரக்யா ராஜ் அரசு அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித் துத் தரைமட்டமாக்கினர்.

முஸ்லிம்கள் சார்பில் நாடுமுழுவதும் கடந்த ஜூன் 10ஆம் தேதி ஆர் பாட்டங்கள் நடைபெற் றன. உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆர்ப்பாட்டங்க ளுக்கு காரணமானவர் கள் எனக் குறிப்பிட்டு சிலரின் பெயரை அரசு வெளியிட்டது.  இதைத் தொடர்ந்து அவர்களது வீடுகளை புல்டோசர் மூலம் இடித்துத் தரை மட்டமாக்கும் பணியில் அரசுஅதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கான்பூர், ஷஹரான் பூர், அலகாபாத்தில் ஆர் பாட்டக்காரர்கள் சட்ட விரோதமாக எழுப்பப் பட்ட கட்டடத்தில் வசித்து வருவதாக அரசு தரப்பில் விளக்கம் தரப் பட்டுள்ளது.

அலகாபாத்தில் இடிக் கப்பட்ட முகமதின் வீடு அவரது மனைவியின் பேரில் உள்ளது. இந்நிலை யில் இடிப்பு நோட்டீஸை அவருக்கு அனுப்பிவிட்டு வீட்டை இடிப்பது சட்டப் பூர்வ நடவடிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போராட்டக் காரர் களை அமைதியாகச் செயல்படுத்தவும், தங்க ளது குறைபாட்டைத் தெரிவிப்பதற்கான சந் தர்ப்பத்தை வழங்குவதை யும் விட்டுவிட்டு அவர் கள் மீது அராஜக நடவ டிக் கையை உத்தரப்பிரதே மாநில அரசு நிர்வாகம் மேற்கொண்டுள்ளது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் விவரம்:

1. உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.சுதர்ஷன்ரெட்டி 2. உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி வி.கோபால கவுடா 3. உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே.கங்குலி 4. இந்திய சட்ட ஆணைய மேனாள் தலைவரும் டில்லி உயர் நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதியுமான ஏ.பி.ஷா 5. சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு 6. கர்நாடக உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி முகமது அன்வர் 7. உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சாந்தி பூஷண் 8. உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் 9. உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரை ஞர் சந்தர் உதய் சிங் 10. சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் சிறீ ராம் பஞ்சு 11. உச்ச நீதி மன்ற வழக்குரைஞர் பிர சாந்த் பூஷண் 12. உச்ச நீதி மன்ற மூத்த வழக்குரைஞர் ஆனந்த் குரோவர்

இந்தக் கடிதத்தில், உத் தரப்பிரதேச முதலமைச் சர் ஆதித்யநாத் அதிகா ரிகளுக்கு பிறப்பித்த உத் தரவில் தவறு செய்தவர் கள் இதுபோன்ற குற்றங் களை இனி செய்ய நினைக் காதபடியும் எதிர்காலத் தில் இதுபோன்ற குற்றங் களில் ஈடுபட அளவுக்கும் பாடம் புகட்டவேண்டும் என்று கூறியுள்ளதையும் நீதிபதிகள் உச்சநீதிமன் றத்தின் பார்வையில் குறிப் பி டப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment