கூகுள் நிறுவனத்தில் பாலினப் பாகுபாடு வழக்கு பெண் ஊழியர்களுக்கு ரூ.922 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

கூகுள் நிறுவனத்தில் பாலினப் பாகுபாடு வழக்கு பெண் ஊழியர்களுக்கு ரூ.922 கோடி இழப்பீடு வழங்க ஒப்புதல்

நியூயார்க், ஜூன் 15- பாலின பாகுபாட்டை கடைப் பிடித்தாகக் கூறி கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ் வழக்கில், சுமார் ரூ.922 கோடி இழப்பீடு தர கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்கா கலிபோர்னியாவில் அமைந்துள்ள கூகுள் அலுவலகத்தில், பாலின பாகுபாடு கடைப்பிடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அலுவலகத்தில், அனுபவம் வாய்ந்த பெண்களை காட்டிலும் ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், ஊதியம் வழங்குவதிலும் வேறுபாடு காட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

சமமான பதவி வகிக்கும் பெண்களுக்கு ஆண்களை விட குறைவான ஊதியத்தையே கூகுள் நிறுவனம் வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து 2017ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அண் மையில் விசாரணைக்கு வந்த நிலையில், 2013ஆம் ஆண்டு முதல் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப் பீடாக வழங்க கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அலுவலகத்தின் வழி காட்டு நெறிமுறைகள் பாலியல் சமன்பாட்டுடன் இருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள்மீது பாகுபாடு காட்டியதாக 38 லட்சம் டாலர்கள் அபராத தொகையை கூகுள் நிறுவனம் அமெரிக்க தொழிலாளர் துறைக்கு செலுத்த ஒப்புக் கொண் டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment