பல்கலைக்கழகங்களில் வேந்தர் ஆளுநர் கிடையாது - முதலமைச்சரே! மேற்கு வங்க சட்டப் பேரவையில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 15, 2022

பல்கலைக்கழகங்களில் வேந்தர் ஆளுநர் கிடையாது - முதலமைச்சரே! மேற்கு வங்க சட்டப் பேரவையில் தீர்மானம்

கொல்கத்தா, ஜூன் 15 மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மாநில பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் மம்தாவை நியமனம் செய்யும் மசோதா அம்மாநில சட்டப் பேர வையில் நிறைவேற்றப்பட் டுள்ளது.

நாடுமுழுவதும் பெரும் பாலான மாநி லங்களில் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல் படு கிறார். பட்டமளிப்பு விழாவும் ஆளுநர் தலை மையில் நடை பெறுகிறது. அதேபோல் துணைவேந் தரை நியமிப் பதிலும் ஆளுநர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

எதிர்க்கட்சிகள் ஆட்சி நடை பெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், மகாராட்டிரா உள் ளிட்ட மாநி லங்களில் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் மாநில ஆளுநர்களுக் கும், மாநில அரசுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இத னால் ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் பல்கலைக் கழக வேந்தர்களாக நிய மனம் செய்ய இந்த மாநிலங்கள் நடவடிக்கை எடுத்து வரு கின்றன.

மேற்குவங்க முதல மைச்சர் மம்தா  மற்றும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் இடையே ஏற்கெனவே மோதல் இருந்து வருகி றது  பல்வேறு விஷயங் களில் எதிரெதிராக செயல்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச் சியாக பல்கலைக்கழக வேந் தராக முதலமைச்சர் மம் தாவை நியமிக்க நட வடிக்கை எடுக்கப்பட் டது. மேற்கு வங்கத்தில் சுகாதாரத்துறை, வேளாந்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பான்மை விவகாரங்கள் துறைகளின் கீழ் மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் அனைத்து வித மான பல்கலைக்கழகங்க ளின் வேந்தராக ஆளுந ருக்கு பதிலாக முதலமைச் சர் மம்தாவை நியமிக்கும் மசோதாவுக்கு அண்மை யில் மாநில அமைச்சரவை ஒப் புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை யில் நேற்று (13.6.2022) மசோதா தாக்கல் செய்யப்பட்டு அவை யின் ஒப்புதல் பெறப்பட்டது.

மேற்குவங்கத்தில் கொல் கத்தா பல்கலைக் கழகம், ஜாதவ்பூர் பல் கலைக்கழகம், ரவீந்திர பாரதி பல்கலைக் கழகம் உள்ளிட்ட 17 மாநில பல்கலைக்கழகங்கள் உள் ளன. இதற்கு தற்போது ஆளுநர் வேந்தராக செயல் படுகிறார். இதனை மாற்றி தற்போது சட்டம் கொண்டு வரப்படுகிறது.

No comments:

Post a Comment