வாரணாசி, ஜூன் 15 உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் விண்வெளிக் கள ஆய்வு நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. இது தொடர்பான சாத்தியக் கூறுகளை அறிய ஏ.எஸ்.அய்.க்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட் டுள்ளது.
மேற்குவங்க தலைநகர் கொல் கத்தாவை சேர்ந்தவர் தொல்லியல் ஆய்வாளர் டாக் டர் மணிஷ் அகர் வால். இவர் சமீபத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதி யுள்ளார். அதில் அவர் வாரணாசி, கியான்வாபி மசூதியில் நடைபெற்ற நேரடிக் கள ஆய்வு மீதான சர்ச் சையை குறிப் பிட்டுள்ளார். இது போன்ற சர்ச்சைகளை தவிர்க்க கியான்வாபிக்குள் செல்லாமலும் அக்கட்டடத்தை தொடாமலும் கள ஆய்வு நடத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதற்காக, ‘காஸ்மிக் ரே மியு ஆன்ஸ் சர்வே’ எனும் விண்வெளிக் களஆய்வு நடத்த அவர் யோசனை கூறியுள்ளார்.
மணிஷ் அகர்வாலின் இக் கடிதத்தை ஆய்வு செய்த பிரதமர் அலுவலகம் அத்தகைய ஆய்வுக் கான சாத்தியக்கூறுகளை அறிய முடிவு செய்துள்ளது. இதற்காக அக்கடிதத்தை இந்திய தொல் பொருள் ஆய்வுக் கழகத்தின் தலை மையகம் மூலமாக அதன் கொல் கத்தா கிளைக்கு ஜுன் 11இ-ல் அனுப்பியுள்ளது.
இதையடுத்து மணிஷ் அகர்லால் குறிப் பிட்டுள்ள விண்வெளிக் கள ஆய்வு தொடர் பான கருத்துகளை துறை நிபுணர்களை தொடர்பு கொண்டு ஏ.எஸ்.அய். கேட்டு வருகிறது. வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்களிடமும் யோசனை கேட்கப் பட்டுள்ளது. இந்தவகை விண்வெளி கள ஆய்வின் மூலம் மண்ணுக்கு அடியில், சுவர் களுக்கு உள்ளே இருப்பதையும் எந்த சேதமும் ஏற்படுத்தாமல் கண் டறியலாம் எனக் கூறப்படுகிறது. இந்தவகை கள ஆய் வின் மூலம் கியான்வாபி மசூதிக்கு முன்பாக அங்கு விஷ்வேஸ்வரர் கோயில் இருந்ததா என எளிதில் அறிய முடியும் எனவும் மணிஷ் அகர்வால் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். ஒசுகானாவில் இருப்பதாகக் கூறப் படும் சிவலிங்கத்தின் உண்மை நிலை என்ன என்பதையும் விண் வெளிக் களஆய்வில் கண்டுபிடிக்க முடியும் எனவும் தெரிகிறது.
வாரணாசி, காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிங்காரக் கவுரி அம்மனை அன்றாடம் தரிசிக்க அனுமதி கோரி வழக்கு தொடுக்கப் பட்டது. இவ்வழக்கில் வாரணாசி சிவில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கியான்வாபியில் கள ஆய்வு நடை பெற்றது. இதில் மசூதியி னுள் கோயில் இருந்ததற்கான பல முத்தி ரைகள், இந்து கடவுள்களின் சின்னங்கள் மற்றும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் கிடைத்ததாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து ஒசுகானாவுக்கு ‘சீல்’ வைக்கப் பட்டு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து பிரதம ருக்கு ஆய்வாளர்மணிஷ் அகர்வால் கடிதம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment