அக்னிப் பரீட்சை: வடமாநிலங்கள் பற்றி எரிகின்றன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 18, 2022

அக்னிப் பரீட்சை: வடமாநிலங்கள் பற்றி எரிகின்றன

பாட்னா, ஜூன் 18 அக்னி பாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிர தேசம், அரியானா ஆகிய மாநிலங் களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன, ரயில்வே சொத் துகள் சேதப்படுத்தப் பட்டன. சாலைகளில் பேருந்து கண் ணாடிகள் அடித்து நொறுக்கப் பட்டன.

ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னி பாதை திட்டத்தை அறிமுகம் செய்ய ஒன்றிய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான தொகையுடன் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னி பாதை திட்டம் கொண்டு வரப்பட வுள்ளது.

இந்த புதிய கொள்கையை பல தரப்பினரும் விமர்சித்து வருகின் றனர். இந்நிலையில் அக்னி பாதை திட்டத்தை திரும்பபெறக் கோரி பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிர தேசம், ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள்   போராட்டம் நடத்துகின்றனர்.

பீகார்

பீகாரின் கைமூர் மாவட்டத்தில் உள்ள பஹாபுவா ரயில் நிலையத்தில் கம்புகளுடன் புகுந்த இளைஞர்கள் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் கண்ணாடிகளை அடித்து நொறுக் கினர். ரயில் பெட்டி ஒன்றுக்கும் அவர்கள் தீ வைத்தனர். ‘இந்தியன் ஆர்மி லவ்வர்ஸ்’ என்ற பேனரை கையில் வைத்திருந்த இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்தை திரும்ப பெறக் கோரி முழக்கம் எழுப்பினர். பீகாரின் சப்ரா, கோபால்கன்ஜ் மற்றும் கைமூர் மாவட்டங்களில் மொத்தம் 3 ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன.

பீகாரின் நவடா நகரில் பா.ஜ.க  சட்டமன்ற உறுப்பினர் அருணா தேவியின் காரை வழிமறித்த போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக் குதல் நடத்தினர். இதில் அருணா தேவி, அவரது பாதுகாவலர்கள் இருவர், ஓட்டுநர் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

பீகாரின் ஆரா ரயில் நிலையத் துக்குள் புகுந்த இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் மீது இளைஞர்கள் கல்வீச்சு தாக் குதல் நடத்தினர். அவர்களை விரட்டியடிக்க காவலர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேஜை, நாற்காலிகளை தண்டவாளத்தில் தூக்கி எறிந்து அவற்றுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அவர்களை அமைதி காக்கும்படி ஒலிபெருக்கிகள் மூலம் காவல்துறையினர் வேண்டு கோள் விடுத்தனர்.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் முன்பு இளைஞர்கள்  போராட்டம் நடத்தினர்.

உத்தரப்பிரதேசம்

உத்தர பிரதேசத்தின் புலந்த்சாகர் மற்றும் பலியா ஆகிய மாவட்டங் களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் கோரிக் கைகள் ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கப் படும் என அதிகாரிகள் உறுதியளித் ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மத்தியப் பிரதேசம்

மத்திய பிரதேசம் குவாலியர் ரயில் நிலையத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் ரயில்கள் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக் கினர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டி யடித்தனர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஜோத்பூர், சிகர், ஜெய்ப்பூர், நாகர், அஜ்மீர் மற்றும் ஜுன்ஜுனு ஆகிய மாவட்டங்களில் ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சி தலைமையில், ராணு வத்தில் சேர விரும்பும் இளைஞர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியானா

அரியானாவில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் பல்வால் பகுதி காவல்துறை துணை ஆணை யர் கிருஷ்ண குமார் வீட்டில் இருந்த காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். அவர்களை விரட்டியடிக்க காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

ராகுல்காந்தி அக்னி பரீட்சை வேண்டாம்

அக்னிபாதை திட்டம் குறித்து பா.ஜ.க.வை விமர்சித்துள்ள காங் கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி, “பதவி இல்லை, ஒய்வூதியம் இல்லை, 2 ஆண்டுகளுக்கு நேரடி ஆட்தேர்வு இல்லை. 4 ஆண்டு களுக்குப் பிறகு நிலையான எதிர் காலம் இல்லை. ராணுவத்துக்கு மரியாதை இல்லை. வேலை வாய்ப் பில்லாத இளைஞர்களின் குரலை கேளுங்கள். இளைஞர்களை அக்னி பாதையில் நுழைக்கும் அக்னி பரீட்சையை மேற்கொள்ள வேண் டாம்” என கூறியுள்ளார்.

 துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி 

செகந்திராபாத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் படுகாயம் அடைந்தனர். 

அய்தராபாத், அக்னி பத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலுங் கானா மாநிலங்களில் பயங்கர வன் முறை வெடித்துள்ளது. 

ரயில் பெட்டிகள் எரிப்பு சம்பவங் களால் நாடு முழுவதும் 200 ரயில் களின் சேவை பாதிக்கப் பட்டுள்ளது. 

தெலுங்கானா ரயில் நிலையத் தில் வன்முறையாளர்களைக் கட்டுப் படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 15 பேர் படுகாயமடைந் தனர். காயமடைந்தவர்கள் அனை வரும் தெலுங்கானா காந்தி மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். 

இது குறித்து ரயில்வே துறை மூத்த அதிகாரி ஒருவர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் நடத்திய லத்தி சார்ஜ், கண்ணீர் புகை குண்டு என எதுவும் பலன் தராத நிலையில் அவர்கள் வலுக்கட்டாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றார்.  

No comments:

Post a Comment