உணவுப் பாதுகாப்பு குறியீடு: முதலிடத்தில் தமிழ்நாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 8, 2022

உணவுப் பாதுகாப்பு குறியீடு: முதலிடத்தில் தமிழ்நாடு

புதுடில்லி,ஜூன்8-உணவு பாதுகாப்பு குறியீடு  2021-2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது .பொதுமக்களுக்கு பாது காப்பான உணவை உறுதி செய்வதில் உண வுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறி யீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில், 2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறி யீடு வெளியிடப்பட்டுள் ளது.

இந்தியா முழுவதும் உள்ள 20 பெரிய மாநி லங்களில் உணவுப்பாது காப்புக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உணவு பாதுகாப்பு குறியீடு குறித்து வெளியிடப்பட் டுள்ள 4ஆவது அறிக்கை யில் 10 மாநிலங்கள் தரவரிசையில் தமிழ்நாடு முதலிடத்தைப் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட் டைத் தொடர்ந்து குஜ ராத், மராட்டியம்,  இமாச் சலப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப்பிரதே சம், கேரளா, உத்தர்காண்ட், ஒடிசா, உத்தரப்பிரதே சம், கருநாடகா, இராஜஸ் தான் ஆகிய மாநிலங்கள் வரிசைப் படுத்தப்பட்டு உள்ளன.

மேலும், சிறிய மாநி லங்களுக்கான பட்டிய லில் கோவா முதலிடத் திலும், மணிப்பூர் இரண் டாவது இடத்திலும், சிக் கிம் 3ஆவது இடத்திலும் உள்ளது. யூனியன் பிர தேசங்களில் ஜம்மு காஷ் மீர் முதலிடத்திலும், அடுத்த இரண்டு இடங் களை டில்லி, சண்டிகர் பெற்றுள்ளன.

ஒன்றிய சுகாதாரத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உண வுப்பாதுகாப்பில் 5 தர நிர்ணயத்தின் அடிப்ப டையில் உணவுப்பாது காப்பு குறியீடு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெற்றி பெற்றுள்ள மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச் சர் மன்சுக் மாண்டவியா வாழ்த்து தெரிவித்தார். 

பன்னாட்டு உணவு பாதுகாப்பு நாளில் அவர் கூறுகையில், உணவுப் பாதுப்பு மற்றும் ஆரோக் கியமான உணவுமுறைக ளில் மாநிலங்களின் பங் களிப்பு மிகவும் இன்றிய மையாதது. ஆரோக்கிய மான நாட்டை கட்ட மைப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்றார்.

No comments:

Post a Comment