பாரம்பரிய விளையாட்டு சிலம்பம்: மீட்டெடுக்கும் இளைய சமுதாயம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 13, 2022

பாரம்பரிய விளையாட்டு சிலம்பம்: மீட்டெடுக்கும் இளைய சமுதாயம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்

நாகை, ஜூன் 13 தமிழ்நாட்டில் பாரம்பரிய விளையாட்டுகளை மீட் டெடுக்க முதலமைச்சர்  தொடர்ந்து பாடுபட்டு வருகிறார் என்று விளை யாட்டுத் துறை  மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் தெரிவித்தார்.

கலைஞரின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாகை தெற்கு மாவட்ட திமுக சார்பில் உலக சாதனை நிகழ்ச்சிக்காக சிலம்ப விளையாட்டு போட்டி அவுரித்திடலில்  நடந்தது. நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப் பாளர் கவுதமன் தலைமை வகித்தார். அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் போட் டிகளை தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

இங்கு 350 மாணவ, மாணவிகள் 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் சிலம் பமும் ஒன்று. அதை மீட்டு எடுக்கும் வகையில் இன்றைய இளைய சமுதாயம் களத்தில் இறங்கியுள்ளது பெருமையாக உள்ளது. சிலம்ப ஆசான்கள், பேராசான்கள் 100 பேரை தேர்வு செய்து ஒரு ஆசானுக்கு ஒரு லட்சம் வீதம் ரூ.1 கோடி வழங்க முதலமைச்சர்  அறிவித்துள்ளார்.

அதே போல் சிலம்ப வீரர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ், 3 சதவீதம் ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டு களை மீட்டெடுக்க முதலமைச்சர்  தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். ஒன்றிய அரசின் கோலோ இந்தியா திட்டத்தின் கீழ், சிலம்ப விளையாட் டுகளை சேர்க்கவும் முதலமைச்சர்  தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment