திரவுபதி முர்முவின் ஊரில் இன்னும் மின்சார வசதியில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 26, 2022

திரவுபதி முர்முவின் ஊரில் இன்னும் மின்சார வசதியில்லை

புதுதில்லி, ஜூன் 26- குடியரசுத் தலைவர் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய  ஜனநாயகக் கூட்டணி சார்பில்  திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். 

ஆனால் அவரது கிராமத்துக்கு இன்னமும் மின்சார வசதி கிடைக்க வில்லை. சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் இந்தத் தருணத்தில் அதுவும் நாங்கள் தான்  தேசத்தின் காவலர்கள் என்று பெருமையடித்துக் கொள் ளும் மோடி, அமித்ஷாவின் ஆட்சியின் லட்சணம் இது தான்.  

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அமைந்தி ருக்கும் அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் முர்முவின் சகோதரரின் மகன் உள்பட 20 குடும் பங்கள் வசித்து வருகின்றன.  முர்முவின் பெரிய சகோதரர் பகத் சரண் டூடு, இறந்து விட்டார். அவரது மகன் பிராஞ்சி நாராயண் டூடு, தனது  மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் அந்தக் கிரா மத்தில்தான் வசிக்கிறார். இன்றும், மாலை இருட்டியதும், மண்ணெண்ணெய் விளக்கைக் கொண்டுதான் வீட்டுக்கு  வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள். திரவுபதி முர்மு குசுமி பகுதியில் உள்ள உபெர்பெடா  கிராமத்தில் பிறந்தார். அங்கும் அதன் அருகில் உள்ள  துன்கிர்சாஹி பகுதி யிலும் இன்னும் மின்சாரம் இல்லை.  தங்கள் அலைபேசிகளை 'சார்ஜ்' செய்ய அருகில் உள்ள படா சாஹி பகுதிக்கு தான் செல்ல வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.


No comments:

Post a Comment