அரிக்கமேடு பகுதியில் மீண்டும் அகழாய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

அரிக்கமேடு பகுதியில் மீண்டும் அகழாய்வு

புதுச்சேரி, ஜூன்.7 அரிக்கமேடு பகுதியில் மீண்டும் அகழாய்வு நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

ஒன்றிய இணையமைச்சர் மீனாட்சி லேகி புதுச்சேரிக்கு வந்துள்ளார்.  அவர் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கு பெற்றார். அப்போது அமைச்சர், “ஒன்றிய அரசு புதுச்சேரி அரிக்கமேடு தொல்லியல் தளங்களை மீண்டும் அகழாய்வு செய்து மேம்படுத்த நட வடிக்கை எடுக்கும். இந்த அரிக்க மேடானது, நாட்டின் தொல் பொருள் முக்கியத்தும் வாய்ந்த பகுதியாக உள்ளது.  இந்த புராதன தளமான பகுதி நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டது வேதனை யளிக்கிறது.

 அந்த மேம்பாட்டுப்பணிகளை இந்திய தொல்லியல் துறை அங்கு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத் தும்.

பாரம்பரிய, வரலாற்றுப்பூர்வ மான சுற்றுப்பகுதியாகப் புதுச்சேரி நகரம் உள்ளதால், அதனைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவருமே தூய்மைப் பணியை கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment