4 மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்புத் திட்டம் ரூ.16,614 கோடி நிதி ஒதுக்க நீர்வளத்துறை கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 7, 2022

4 மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்புத் திட்டம் ரூ.16,614 கோடி நிதி ஒதுக்க நீர்வளத்துறை கோரிக்கை

 புதுடில்லி, ஜூன் 7  திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்கள் வடகிழக்கு பருவ மழை  காலக்கட்டத்தில் பாதிக்கப் படுவதை தடுக்க ரூ.16,614 கோடியில் நிரந்தர  வெள்ளத்தடுப்பு திட் டத்தை செயல்படுத்த நிதி தேவை என்று நீர்வளத்துறை  சார்பில் முதற்கட்ட அறிக்கை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலக் கட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை  சந்தித்து வருகிறது. இதனால், கோடிக் கணக்கில் இழப்பு ஏற்படுவது என்பது  தவிர்க்க முடியாததாகி விட்டது. குறிப்பாக, கடந்த 2015 டிசம்பர் மாதம் பெய்த  மழையால் அடையாறு, கொசஸ்தலையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட  பல்வேறு கால்வாய்களில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடிய தாலும், ஏரிகள்  நிரம்பியதாலும், குடியிருப்பு பகுதிகளுக்குள் தண் ணீர் சென்றது.

இதன்  காரணமாக லட்சக் கணக்கானோர் உடைமையை இழந்தனர். இந்த சம்பவத்தால் ரூ25 ஆயிரம்  கோடி வரை இழப்பு ஏற் பட்டது.

இந்த பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் தொடரும்  நிலையில், வெள்ள தடுப்பு திட்டப்பணிகளை படிப்படியாக செயல்படுத்த தமிழ் நாடு அரசு  முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஆரணி யாறு, கொசஸ்தலையாறு, கூவம்,  அடையாறு, கோவளம் உபவடி நிலங்களில் ரூ100 கோடியில் வெள்ள தடுப்பு  திட்டப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து 2ஆவது கட்ட மாக  ரூ238 கோடியில் 12 பணிகள் எடுத்து கொள்ளப்பட்டன.இப் பணிகள் முடியும்  தருவாயில் உள் ளன. தொடர்ந்து, 3ஆவது கட்ட மாக ரூ.182 கோடி செலவில் சென்னை  மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளான பெரும் பாக்கம், செம்மஞ்சேரி,  ஒட்டியம் பாக்கம், பள்ளிக்கரணை, ஆதம்பாக் கத்தில் வடிகால்கள் அமைப்பது,  தடுப்பு சுவர் அமைப்பது, கால் வாயை திருப்பி விடுவது உள்ளிட்ட பணிகள்  மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகள் விரைவில் தொடங் கப்படும் என்று  எதிர்பார்க்கப்படு கிறது.இதற்கிடையே கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்  போது, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் பல இடங்களில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. எனவே, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  திருவள்ளூர் மாவட்டங்களில் நிரந்தர வெள்ள வெள்ள தடுப்பு திட்டத்தை பெரிய  அளவில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாவட் டத்தில்  ரூ.228 கோடியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.754 கோடி செலவிலும்,  திருவள்ளூர் மாவட் டத்தில் ரூ.4334 கோடி செலவிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில்  ரூ.11,298 கோடி செலவில் வெள்ள தடுப்பு திட்டபணிகளை மேற் கொள்வதற்காக நிதி  தேவைப் படுகிறது. இந்த நிதியை கொண்டு புதிதாக வடிகால்கள், கால்வாய்கள் மறு  சீரமைப்பு, புதிய கால்வாய்கள் அமைத்தல், ஏரிகள் புனரமைப்பு, தடுப்பணைகள் கட்டுதல் உள் ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகிறது.  இது  தொடர்பாக முதற்கட்ட அறிக் கையை நீர்வளத்துறை சார்பில் தமிழ்நாடு அரசிடம் தாக்கல்  செய்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் இனி  வருங்காலங்களில் 4 மாவட் டங்களில் பருவமழை காலகட் டத்தில் வெள்ளத்தால்  பாதிக்கப் படுவது தடுக்கப்படும். மேலும், இந்த திட்டத்துக்கு ஒப்புதல்  கிடைக்கும் பட்சத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் விரிவான திட்ட  அறிக்கை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அதிகாரி  ஒருவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment