10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியாகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 20ஆம் தேதி வெளியாகிறது

சென்னை, ஜூன் 16  2021-2022ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 9 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினர். அவர்களின் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 1ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. 

திருத்திய மதிப்பெண்களை பட்டியலிட்டு, தேர்வுத் துறை அதிகாரிகள் சரிபார்த்து, தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யும் பணியும் முடிந்திருக்கிறது. 

ஏற்கெனவே தேர்வு குறித்த அட்டவணை வெளியிடும்போதே, தேர்வு முடிவு ஜூன் 17ஆம் தேதி (நாளை) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in  இணையதளங்களில் காணலாம். 

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மய்யம் மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முதல் முறையாக ஒரே நாளில் வெளியிடப்படுகிறது.


No comments:

Post a Comment