ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வுத் துறை அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 16, 2022

ஆசிரியர் பயிற்சித் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வுத் துறை அறிவிப்பு

சென்னை, ஜூன் 16 ஆசிரியர் பயிற்சி தேர்வு ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ளது. தனித் தேர்வர்களாக எழுத விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

 ஏற்கெனவே தேர்வு எழுதி  தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றுகளையும் இணைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலம் 28ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

தேர்வுக் கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும்  ரூ.50, மதிப்பெண் சான்று (முதலாம் ஆண்டு) ரூ.100, இரண்டாம் ஆண்டு மதிப்பெண் சான்று ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ.15, இணைய வழி பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்க தவறும் நபர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஜூலை 8ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment