கோத்தபய பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் : சிங்கள அமைப்புகள் உறுதி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

கோத்தபய பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் : சிங்கள அமைப்புகள் உறுதி!

கொழும்பு, மே 14 இலங்கையில் புதிய அமைச்சரவை அமைக்கும் முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். 

இலங்கையில் பொருளாதார நெருக் கடியை சமாளிக்கவும், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளோரை சமா தானப்படுத்தவும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக அறிவித்தார் அதிபர் கோத்தபய ராஜபக்ச. இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலை யில், புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைக்கப்படும் என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே 11.5.2022 அன்று இரவு அறிவித் திருந்தார். இந்நிலையில், அதிபர் மாளிகை யில் அதிபர் கோத்தபய ராஜபக்சே முன்னி லையில், ரணில் விக்கிரமசிங்க நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார்.  அதனைத் தொடர்ந்து பிரதமராக தனது பொறுப்புகளை கவனிக்கத் தொடங்கிய ரணில் விக்ரமசிங்க, அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆனால், கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளவர்கள், போராட்டத்தை தொடரப் போவ தாக கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment