கட்சியில் மறுமலர்ச்சி கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியம்! காங்கிரஸ் சிந்தனை மாநாட்டில் சோனியா காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 14, 2022

கட்சியில் மறுமலர்ச்சி கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியம்! காங்கிரஸ் சிந்தனை மாநாட்டில் சோனியா காந்தி

உதய்ப்பூர், மே 14 காங்கிரசில் மறுமலர்ச்சி என்பது மகத்தான கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியப்படும் என்று சிந்தனை மாநாட்டில் சோனியா காந்தி திட்டவட்டமாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்டும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக் கைகள் குறித்து ஆராய்வதற்காக ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் அந்த கட்சி நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர் என்ற பெயரில் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாடு நடத்துகிறது.

இந்த மாநாட்டை கட்சியின் தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி செயல்படும் பாணியை மாற்றிக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட விருப்பங்களைவிட கட்சி முக்கியம். தங்கள் தனிப்பட்ட விருப்பங் களை புறந்தள்ளி விட்டு, எல்லோருக்கும் நிறைய வழங்கிய கட்சிக்கு, தாங்கள் பட்ட கடனை திரும்பி செலுத்த வேண்டும். 

எல்லோரும் திறந்த மனதுடன், வெளிப்படையாக இங்கு விவாதிக்க அழைக்கிறேன். ஆனால், பலமிக்க அமைப்பின் ஒற்றை செய்தி என உறுதியும், ஒற்றுமையும்தான் இங்கி ருந்து வெளியே போக வேண்டும்.

கூட்டு முயற்சி தேவை

ஒரு வகையில் பார்க்கிறபோது காங்கிரசில் உடனடி மாற்றம் தேவை என்பது அடிப்படையான பிரச்சினை யாக அமைந்திருக்கிறது. அனைவரும் கூட்டு சேர்ந்து முயற்சித்தால்தான் கட்சிக்கு புத்துயிரூட்டுவது சாத்தியம் ஆகும். அத்தகைய கூட்டு முயற்சிகளை நாம் தள்ளிப்போடலாகாது. இந்த சிந்தனைதான், பயணத்தின் தொடக்கம் ஆகும்.

நமது கட்சி அமைப்புக்கு முன்னால் உள்ள சூழல்கள், இதுவரை இல்லா தவை. அவை, அசாதாரணமான சூழல்கள் ஆகும். அவை, அசாதாரணமான நடவடிக்கையை கோருகின்றன. நான் இதை முழுமையாய் உணர்ந்திருக் கிறேன். உயிர்ப்புடன் இருப்பதற்காக மட்டுமல்ல, முன்னேற்றப்பாதையில் பீடு நடைபோடுவதற்கும் கட்சி அமைப்பு தனக்குள் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். நாம் முன் னேற்றம் காண வேண்டிய, யுக்தியை மாற்ற வேண்டிய அவசர தேவையில் இருக்கிறோம்.

காங்கிரஸ் கட்சியில் மறுமலர்ச்சி என்பது மகத்தான கூட்டு முயற்சிகளால் மட்டுமே சாத்தியப்படும். அவற்றை நாம் ஒத்தி போடக்கூடாது.

இந்த பயணத்தில், இந்த சிந்தனை ஒரு முக்கியமான படி ஆகும்.

தோல்விகளை 
மறந்து விடவில்லை...

சமீபத்திய தோல்விகளை நாம் மறந்து விடவில்லை. வெற்றி பெறுவ தற்காக நாம் எதிர்கொள்ள வேண்டிய போராட்டத்தையும் மறந்து விட வில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் உணராதவர்கள் அல்ல.

நமது கட்சியை, ஒரு காலத்தில் இருந்த நிலைக்கு திரும்ப கொண்டு வரவும், மோசமாகி வரும் சூழ்நி லைகளில் மக்கள் எதிர்பார்க்கிற பங்க ளிப்புகளை செய்யவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து தீர்மானிக்க வேண்டும். அதற்காகத்தான் நாம் இங்கே கூடி இருக்கிறோம். 

குறைவான நபர்களை கொண்டு சிறப்பான ஆட்சி நிர்வாகம் என்று மோடியும், அவரது கூட்டாளிகளும் அடிக்கடி முழங்குவதன் உண்மையான அர்த்தம் என்ன என்பது வலி மிகுந்த தாக தெளிவாகிவிட்டது.

புலனாய்வு அமைப்புகள் 
தவறாக பயன்படுத்துதல்

இதன் அர்த்தம், நாட்டை எப் போதுமே பிளவுபடுத்தி வைத்திருப்ப தும், எப்போதும் மக்களை அச்சத்திலும், பாதுகாப்பற்ற நிலையிலும் வாழ நிர்ப்பந்திப்பதும் ஆகும். இதன் அர்த் தம், நமது சமூகத்தின் ஒன்றிணைந்த பகுதியாகவும், நமது நாட்டின் சம குடிமக்களாகவும் இருக்கும் சிறுபான் மையினரை கொடூரமாக குறிவைப்பது, பலி கடா ஆக்குவது, அடிக்கடி கொடூர மாக நடத்துவது ஆகும். இதன் அர்த்தம், நமது சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பயன்படுத்தி, நம்மைப் பிளவுபடுத்து வதும், ஒற்றுமை, வேற்றுமை பற்றி கவ னமாக வளர்க்கப்பட்ட எண்ணத்தைத் தகர்ப்பதும் ஆகும். இதன் அர்த்தம், அரசியல் எதிரிகளை பயமுறுத்துவதும், மிரட்டுவதும், அவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதும், வலுவற்ற புகார்களில் அவர்களை சிறையில் தள் ளுவதும், மத்திய புலனாய்வு அமைப் புகளை தவறாக பயன்படுத்துவதும் ஆகும்.

இதன் அர்த்தம், ஜனநாயகத்தின் அனைத்து அமைப்புகளின் சுதந்தி ரத்தை, தொழில்முறையை சிதைப்பதும் ஆகும்.

பா.ஜ.க. தலைமையிலான அரசு வர லாற்றை சிதைக்கிறது. அதன் தலைவர் களை குறிப்பாக ஜவகர்லால் நேருவை இழிவுபடுத்துகிறது. இதன் அர்த்தம்,  காந்தியாரையும் கொலை செய்தவர் களை போற்றுவதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment