ஆற்றல் மிக்க "எக்ஸ்ரே-லேசர்" கருவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 26, 2022

ஆற்றல் மிக்க "எக்ஸ்ரே-லேசர்" கருவி

பெரிய அளவில் பராமரிப்பும், மேம்பாட்டுப் பணிகளும் முடிந்த பின் அது தயாராகிவிட்டது. எது? விநாடிக்கு பத்து லட்சம் முறை எக்ஸ்ரே-லேசர் கதிர் துடிப்புகளை வெளியிடும் கருவி.

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழத்திலுள்ள எல்.சி.எல்.எஸ்-., - மிமி என்ற அந்தக் கருவி, விண்வெளி வெற்றிடத்தில் நிலவுவதைவிடக் கடுங்குளிர்ச்சியான தட்பநிலையை உருவாக்கி, அதன் வாயிலாக, ஒளியின் வேகத்திற்கு சற்றே குறைந்த வேகத்தில் எக்ஸ்ரே லேசர் கதிரை வெளியிடும் திறன் கொண்டது.

ஒரு வினாடிக்கு பத்து லட்சம் எக்ஸ்ரே கதிர் துடிப்புக்களை எல்.சி.எல்.எஸ்., - மிமி கருவியால் வெளியிட முடியும். அந்த ஒவ்வொரு துடிப்பும், இதற்கு முன்பிருந்த லேசர் கதிர் கருவி வெளியிட்ட துடிப்புகளைவிட, பத்தாயிரம் மடங்கு பிரகாசமான துடிப்புகளை, மேம்படுத்தப்பட்ட எல்.சி.எல்.எஸ்-., - மிமி கருவியால் வெளியிட முடியும்.இந்த ஆண்டு இறுதி வாக்கில், எல்.சி.எல். எஸ்., - மிமி கருவியை ஸ்டான்போர்டு இயக்கத் துவங்குவர். அப்போது, வேதியல், உயிரியல், கணிப்பொறியியல், குவாண்டம் இயந்திரவியல் போன்ற பல அறிவியல் துறைகளில் கற்பனைக் கெட்டாத வித்தியாசமான பரிசோதனைகளை செய்ய முடியும்.பழைய லேசர் கருவியை வைத்து, வைரஸ்களை படம்பிடிப்பது முதல் மிகப் பெரும் ஓசையை உருவாக்குவது வரை பலவித சோதனைகளை ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள் வெற்றிகரமாகச் செய்திருக்கின்றனர்.


No comments:

Post a Comment