பார்ப்பனர்களுக்கு மட்டும் பொதுத்துறை நிறுவனம் கல்வி உதவித்தொகை தருவதா? மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

பார்ப்பனர்களுக்கு மட்டும் பொதுத்துறை நிறுவனம் கல்வி உதவித்தொகை தருவதா? மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு

சென்னை, மே. 9- அய்.அய்.டி. யில் உயர்ஜாதியினருக் கான இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்க ளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கிய பொதுத்துறை நிறுவனம் மீது விசாரணை வேண் டும் என்று  மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் கூறியுள்ளார்

பொதுத்துறை நிறு வனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் குறிப் பிட்ட பிரிவு மாணவர்க ளுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கியது தெரியவந்துள்ளது.

தேசிய பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் (சி.எஸ்.ஆர். / Corporate Social Responsibility - CSR Fund)  இருந்து 2021-2022 நிதியாண்டில் 10.5 கோடி ரூபாயை சென்னை அய்.அய்.டி.க்கு வழங்கி யுள்ளது பவர் கிரிட் கார்ப்பரேஷன்.

இந்த நிதி முழுவதும்  பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த மாண வர்களுக்கு மட்டும் கல்வி உதவித் தொகையாக வழங்க வகை செய்து உள்ளது.

தாழ்த்தப்பட்ட., பழங் குடியின மற்றும்  இதர பிற்பட்ட வகுப்பினருக்கு எந்த ஒரு நிதியையும் இந்த நிறுவனம் ஒதுக்கீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.இந்த நிலையில், ஒரு குறிப் பிட்ட பிரிவை / சமூகத் தைச் சேர்ந்த மாணவர்க ளுக்கு  மட்டும் பயன்படும் வகையில் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் செயல் பட்டிருப்பது அத்துமீறிய செயல் என்றும்அந்த நிறு வனத்தின் செயல்பாடு குறித்து ஒன்றிய மின் துறை அமைச்சர் உடன டியாக தலையிட்டு தவறி ழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், ஒரு குறிப் பிட்ட பிரிவினருக்கு மட் டும் சலுகை காட்டும் வகையில் நடந்து கொண்ட நிறுவனத்திற்கு கண்டன மும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment