பேசுவது கருஞ்சட்டையல்ல! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 9, 2022

பேசுவது கருஞ்சட்டையல்ல!

கடவுளுக்குப் பக்கத்தில் இருந்து, இருந்து, இருந்து தன்னையும் கடவுளாக நினைக்கின்ற குணம் பெரிதாகிவிட்டதா? 

நடந்து போனால் நாட்டில் என்ன குடி முழுகிப் போய்விடும்? அடக்கம்தானே மதத்தின் அடிப்படை!

ஆன்மிகப் பேச்சாளர் சுகி.சிவம் கேள்வி

சென்னை, மே 9 கடவுளுக்குப் பக்கத்தில் இருந்து, இருந்து, இருந்து தன்னை கடவுளாக நினைக்கின்ற குணம் பெரிதாகிவிட்டதா உங்களுக்கு? நடந்து போனால் நாட்டில் என்ன குடி முழுகிப் போய்விடும்? அடக்கம்தானே மதத்தினுடைய அடிப்படையே என்றார் ஆன் மீகப் பேச்சாளர் சுகி.சிவம் அவர்கள்.

பல்லக்கு சவாரி குறித்து ஆன்மிகப் பேச் சாளர் சுகி சிவம் கூறியதாவது:

பெருமாளைத் தூக்குவது எங்கள் தலை யெழுத்து; பெருமாளோடு சேர்ந்து இந்த மனிதர்களையும் சுமக்கவேண்டும் என்பது எங்களுக்கு என்ன தலையெழுத்து.

(இதற்குக் கைதட்டுவதற்குக்கூட பயப்படு கிறீர்கள் என்று கூட்டத்தினைப் பார்த்து கேட்டார்).

அதாவது, ஒரு மாறுதலுக்கு நாம் தயாராக இல்லை என்பதற்கு அடையாளம்தான் இது.

பகுத்தறிவு இயக்கத்தின் கேள்வியும் - காஞ்சி பெரியவரின் மன மாற்றமும்

நான் கேட்கும் ஒரு அழுத்தமான கேள்வி என்னவென்றால்,

காஞ்சி பெரியவர் பல்லக்கில் போனார் ஒரு காலத்தில்.

அப்படி அவர் பல்லக்கில் போகும்பொழுது, பகுத்தறிவு இயக்கத்தினர் ஒரு கேள்வி கேட்டனர்.

என்னவென்றால், அவரும் மனிதன்தானே; மனிதனை மனிதன் ஏன் சுமக்கவேண்டும்? என்பதுதான் அந்தக் கேள்வி.

அன்றைக்கு பல்லக்கை விட்டு இறங்கியவர், இனிமேல் நான் பல்லக்கில் போகமாட்டேன் என்று நடந்தேதான் சென்றார். அவர் காரிலும் ஏறமாட்டார்.

வயதான காலத்தில் அவரால் நடக்க முடி யாது இருந்தபொழுதுகூட, முன்னால் ரிக்ஷா செல்ல, அதைப் பிடித்துக்கொண்டே நடந்து சென்றார். 

பல்லக்கில் நீ ஏன் போகிறாய்? என்று ஒருவன் கேள்வி கேட்டவுடன்,

இந்தக் கணமே நான் இறங்கிவிட்டேன் என்று, ஒருவர் இறங்கிக் காட்டுகிறார் என்று சொன்னால், கடவுளோடு உட்கார்ந்து கொண்டி ருக்கின்ற பூசாரிகள் நடந்து போனால், நாட்டில் என்ன குடி முழுகிப் போய்விடும்.

மதத்தைப்பற்றி கேள்வி கேட்கின்ற தைரியும் நமக்கு இல்லை!

உங்களையும் சேர்த்து மனிதர்கள் ஏன் சுமக்க வேண்டும்?

மதத்தைப்பற்றி கேள்வி கேட்கின்ற தைரியும் நமக்கு இல்லை. There are so many blunders in Religion  - மனிதனை நாம் தூக்க முடியாது; மனிதன் சராசரி மனிதன் - அவனை கடவு ளுக்கு நிகரான தகுதி கொடுத்து நம் தோள்மீது தூக்கிக் கொண்டு போக முடியுமா? முடியாது.

இந்த மாற்றத்திற்கு நாம் தயாராக இல்லை.

காரணம் என்ன தெரியுமா?

கடவுளுக்குப் பக்கத்தில் இருந்து இருந்து, இருந்து, தன்னை கடவுளாக நினைக்கிற குணம் பெரிதாகிவிட்டது.

இன்றைக்கு சாமியார்களின் டெக்னிக்கைப் பார்த்திருக்கிறீர்களா?

முதலில் சாமி படத்தையும் போட்டு, அவர் களுடைய படத்தையும் சேர்த்துப் போடு வார்கள்.

கொஞ்ச நாள் கழித்து, சாமி படத்தைவிட இவர்களுடைய படத்தைப் பெரிதாகப் போடு வார்கள்.

மூளைச் சலவை செய்கிறார்கள்!

பிறகு, அந்த சாமி படத்தையே எடுத்து விட்டு, இவர்களுடைய படத்தை முழுதாகப் போடுவார்கள்.

இதெல்லாம் மூளைச் சலவை; மூளைச் சலவை, மூளைச் சலவை.

அவர்களுடைய சாமர்த்தியத்தைப் பாருங்கள் - எல்லாவற்றையும்விட, உன்னை பெரிய மனிதனாக நினைத்துக்கொண்டு, எப்படி இப்படி கர்வமாக இருக்கலாம்?

அடக்கம்தானே மதத்தினுடைய அடிப் படையே!

இவ்வாறு ஆன்மிகப் பேச்சாளர் சுகிசிவம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment