பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசுக்கு மட்டுமே செல்லும் செஸ் வரியை குறைக்காதது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 22, 2022

பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசுக்கு மட்டுமே செல்லும் செஸ் வரியை குறைக்காதது ஏன்?

கே.பாலகிருஷ்ணன் கேள்வி


மதுரை, மே 22  பெட்ரோல் டீசல் விலையில் ஒன்றிய அரசுக்கு மட்டுமே செல்லும் செஸ் வரியை குறைக்காதது ஏன் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கேள்வி எழுப்பி யுள்ளார்.

மதுரையில் நேற்று (21.5.2022) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயற்குழு உறுப் பினர் எம்.என்.எஸ்.வெங்கட் ராமன் படத்திறப்பு நிகழ்ச்சி மாநில குழு உறுப்பினர் ரா.விஜயராஜன் தலைமையில் நடை பெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: 

பிரதமர் மோடி சில நாட் களுக்கு முன்பு, நாட்டில் மொழியை பயன்படுத்தி சர்ச் சையை ஏற்படுத்த பார்க்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழி தான். அனைத்து மொழிகளுக்கும் முக் கியத்துவம் இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால் நடை முறையில் நிகழ்வது வேறு.

சில நாட்களுக்குமுன்பு தமிழ் நாட்டில்  நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவை அனுப்பி இந்தி மொழியை அதிகாரப்பூர்வமாக, அலுவல் மொழியாக எந்தளவுக்கு பயன்படுத்துகின்றனர் என ஆய்வு செய்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது எனச் சொல்லும் மோடி, அனைத்து மொழிகளையும் தேசிய மொழியாக அங்கீகரித்து ஆட்சி மொழியாக அறிவிக்கத் தயாராக இருக்கிறாரா என்று தெரிவிக்க வேண்டும்.

இந்தி போன்று மற்ற மொழி களையும், தமிழ் மொழியையும் வளர்க்க ஏன் அலுவல் மொழிக் குழுவை அமைக்கவில்லை என் பதை தெளிவுபடுத்த வேண்டும். 2024-இல் தேர்தல் வருவதாலும், தங்களுடைய இந்தி மொழிக் கொள்கையில் சர்ச்சை ஏற்பட்டுள் ளதால் அதனை சமாளிப்பதற்காக பிரதமர் மோடி இப்படி பாவலா செய்து வருகிறார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை யேற்றத்தால் மக்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டுள் ளது. இதனை சமாளிக்கும் வகையில் அவசரம் அவசரமாக சில அறிவிப்புகளை வெளியிட் டிருக்கின்றனர். அது பெட்ரோல், டீசலில் கலால் வரி ரூ. 8 குறைத் திருப்பதாக அறிவித்துள்ளனர். பன்னாட்டு அளவில் கச்சா பொருட்களின் விலை குறைந்த போது ஒரே ஆண்டில் சமையல் எரிவாயு ரூ.350 உயர்த்த வேண்டிய அவசியம் என்ன?. கலால் வரியில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் பங்கு போகிறது. ஆனால் செஸ் வரி முழுக்க முழுக்க ஒன்றிய அரசுக்கு மட்டுமே செல்கிறது.

இப்படி ஒன்றிய  அரசுக்கு மட்டுமே வருவாயாக செல்லும் செஸ் வரியை குறைக்காமல் மாநில அரசுக்கும் செல்லும் கலால் வரியை குறைப்பது ஏன்? கடந்த ஆண்டில் மட்டும் செஸ் வரி மூலம் மத்திய அரசு ரூ.28 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆகையால் தான் செஸ் வரியை ரத்து செய்யக் கோருகிறோம். செஸ் வரியை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைந்து விடும். எனவே பெட்ரோல் டீசல் மீதான ஒன்றிய அரசு செஸ் வரியைத் திரும்பப்பெற வேண்டும் என்றார்,

No comments:

Post a Comment