கலால் வரியை குறைத்தது ஒன்றிய அரசு பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 22, 2022

கலால் வரியை குறைத்தது ஒன்றிய அரசு பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைப்பு

சென்னை, மே 22  பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் குறைக்கப்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதனால் பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைகிறது. 

ஒரு சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.200 என 12 உருளைகளுக்கு பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் 9 கோடி பேருக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நவ.3-ஆம் தேதி மக்களுக்கு  பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5, டீசல் மீதான கலால் வரியை ரூ.10 குறைத்து ஒன்றிய அரசு அறிவித்தது. 

இதையடுத்து, இந்த வரி குறைப்பை அமல்படுத் திய பல்வேறு மாநிலங்களில் பெட் ரோல், டீசல் விலை சற்று குறைந்தது.

இந்த சூழலில், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பன் னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையிலும் இது எதிரொலித்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-அய் கடந்தும், டீசல் ரூ.100-அய் கடந் தும் விற்பனையாகிறது. 

இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பை ஒன் றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (21.5.2022) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

No comments:

Post a Comment