உசிலம்பட்டிக்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு - மாவட்ட கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

உசிலம்பட்டிக்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு - மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

உசிலம்பட்டி, மே 10- உசிலம்பட்டியில் மே7மாலை 6 மணிக்கு ப.க. மாவட்டதலைவர் மன்னர்மன் னன் இல்லத்தில் கலந்துரையா டல் கூட்டம் மாவட்ட செய லாளர் த.ம.எரிமலை தலை மையில் எழுச்சியுடன் தொடங் கியது.

தொடக்கவுரையாக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் ஜுன்8இல் உசிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலந்து கொள்ளும் பொதுக்கூட் டத்தை சிறப்பாக நடத்துவதற்கு நாம் செய்யவேண்டிய அடிப் படையான பணிகள் குறித்தும் தலைவர் அவர்களின் சூறாவ ளிப் பயணம் குறித்தும் கூட்டம் நடத்த செய்ய வேண்டியவற்றை தெளிவாக எடுத்துரைத்தார். மாவட்ட ப.க.தலைவரும்40 ஆண்டுகளுக்கு மேலாக சிறப் பாக கழகப்பணியாற்றக்கூடிய வரும் கொடையுள்ளம் கொண் டவருமான மன்னர்மன்னன் அனைவருக்கும் தேனீர் வழங்கி பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த தேவையானவற்றை திட்டமிட்டு செய்யவேண்டிய பணிகளை திட்டங்களை தயாரித்து பேசியதோடு முழு ஒத்துழைப்பு வழங்கி கூட் டத்தை சிறப்பாக நடத்துவோம் என எடுத்துக் கூறினார்.

அடுத்து கருத்துக்களை வழங்கிய மண்டலதலைவர் கா.சிவகுருநாதன் அழ.சிங்க ராஜன் பா..முத்துக்கருப்பன் ஜெ.பாலா, ரோ.கணேசன், வேல்முருகன் து.சந்திரன். பெரிய சாமி, பாண்டி,பா.அழகர் ஆகி யோர் கூட்டம் சிறப்பாக நடைபெற தேவையான வசூல் பணி உள்ளிட்டவைகள் திறம் படசெய்ய ஆயுத்தமாக இருப் பதாக கூறினார்கள்.

ப.க.மாவட்ட அமைப்பா ளரும் இயக்க முன்னோடியு மான பணிநிறைவு பெற்ற ஏஈஒ பால்ராஜ் இயக்கம், கொள்கை தலைவர், அவர்பணிகுறித்து பேசியதோடு கூட்டம் நடை பெற என் பங்களிப்பு சிறப்பா னதாக இருக்கும் எனக்கூறி னார்.

உசிலைநகர்தலைவர் அ.பவுன்ராஜ்தன் உரையில் தற்போது தமிழ்நாட்டின் தொழில், நீர்நிலை ஒப்பந்த தாரர்கள் குறித்த பிரச்சினை கள் அதற்கான தீர்வுகள், குறித்து எடுத்துச்சொன்னதோடு கூட்டத்தை சிறப்பாக நடத்த முழுமூச்சோடு செயல்படு வோம் என உறுதி கூறினார்.

தொடர்ந்து பேசிய மாநில அமைப்புச் செயலாளர் வே.செல்வம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நெடிய பயணம் அதைதொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து வழங்கி கூட்டம் சிறப்பாக நடைபெற தன் முழு ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தார். 

நிறைவாக பேசிய கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார் கடந்த ஒரு மாதகாலத் தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணிகளையும் அதையொற்றி நடைபெற்ற சுவையான நிகழ்வுகள் ஒவ் வொரு நிகழ்விலும்தலைவர் அவர்களின் அனுகுமுறை போன்றவற்றை சுவைபட எடுத்து சொல்லி கூட்டம் சிறப் பாக நடைபெற தேவையான செய்திகளையும் சுவரெழுத்து கொடிகள் அதிகளவில் கட்டு வதன் நோக்கம் அனைத்தையும் எடுத்துச்சொன்னவிதம் பொதுச்செயலாளர் மாநில அமைப்பாளர் இருவரும் கழகத்தலைவர் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கும் களம் அதன் மீது உயர்ந்து நிற்கும் தமிழர் தலைவரின் உரை பிரச்சாரம் அரசியல்அரங்கில் மக்கள் மத்தியில் நம் இயக்கத் திற்கு மேலும் நன்மதிப்பையும் மக்களிடம் இயக்கத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பையும் தந்துள் ளது கண் முன்னால் தெரிகிறது.

தோழர் மன்னர்மன்னனின் செல்வி தேன்மொழி அனைவ ரையும் வரவேற்று உபசரித்த தோடு பேத்தி நிலானி அனை வரிடமும் இனிமையாக பேசி கலந்து கொண்டதோடு எதிர் காலத்தில் அறிவியல் விஞ்ஞானி யாவேன் என்று சொன்னது தோழர்களை மகிழ்ச்சிக்குள் ளாக்கியது. வேல்முருகன் நன்றி கூற ஜெ.பாலா கீழ்க்கண்ட தீர்மானங்களை வாசிக்க அனைவரின் கைதட்டல்களோடு கூட்டம் நிறைவடைந்தது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1: 

சென்னையில் 29.4.2022 அன்று நடைபெற்ற இளைஞரணி கலந் துரையாடலில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை செயல் படுத்துவது என முடிவு செய் யப்பட்டது.

தீர்மானம் 2: 

90 வயதை தொடவுள்ள நமது தலைவர் ஆசிரியர் அவர் கள். கோடை வெப்பத்தையும், உடல் நிலையையும், பொருட் படுத்தாமல் கிராமப்புற பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் எதிர்கால நலனை கருதி நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகிய முழக்கங் களை முன்னிறுத்தி நாகர் கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பயணம் மேற்கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மதுரை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் வாழ்த் துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3:

8.6.2022 அன்று உசிலம்பட் டியில் கழக பொதுக் கூட்டம் நடத்துவதற்கு வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மதுரை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் நன் றியை தெரிவிப்பதுடன் தமிழர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை 8.6.2022 அன்று உசிலம்பட்டியில் மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

8.6.2022 அன்று உசிலம்பட் டி யில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கும், 9.6.2022 அன்று உசிலம்பட்டியில் நடை பெறும் கழகத் தோழர் பெரியார் திடல் ஜெ.பி.ஆனந்த் திருமண விழாவிற்கும் வருகை தரும் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4:

8.6.2022 அன்று உசிலம்பட் டியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடைக்கு சுய மரியாதைச் சுடரொளி அய்ய னார்குளம் பவுன்ராசா நினைவு என அமைப்பது என்று முடிவு செய்யப்படுகிறது. பொதுக் கூட்ட மேடையில் சுயமரியா தைச் சுடரொளி மா.பவுன் ராசா அவர்கள் படத்தினையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 5: 

2022 - ஜூன் மாதம் 9,10,11,12 ஆகிய தேதிகளில் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி முகாமில் மதுரை புற நகர் மாவட்டத்தின் சார்பில் புதிய இளைஞர்கள், மாணவர் களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 6: 

சென்னையில் அன்னை மணியம்மையார் சிலை அமைந் துள்ள வேலன்ஸ் சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டு 7.5.2022 அன்று அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை என்று பெயர் வைக்க தமிழ்நாடு அரசு பிறப்பித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை கொண்டு திறக்கச் செய்த தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாய கர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறது.


No comments:

Post a Comment