கற்றல் குறைபாடுள்ளவர்களின் கல்வி உரிமை உச்சநீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

கற்றல் குறைபாடுள்ளவர்களின் கல்வி உரிமை உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மே 18-- கற்றல் குறைபாடு உள் ளவர்களுக்கான கல்வி உரிமை குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மும்பையை சேர்ந்த நமன் வர்மா என்பவர்  ‘டிஸ்கால்குலியா” என்ற கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர். இவர் மும்பை அய்.அய்.டியில் முதுநிலை டிசைன் பாடத்தில் சேர்வதற்காக கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். ஆனால் இவரது உடல்நிலை கார ணமாக விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டது. இதையடுத்து இவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். இதன்படி அவரை அய்.அய்.டி.யில் சேர்த்து கொள்ள சட்டப்பிரிவு 226 பிரி வின் கீழ் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக் கப்பட்டிருந்தது.

இதையடுத்து உயர்நீதிமன்றத் தின் உத்தரவின் பேரில் நமன் வெர்மா அய்.அய்.டி மும்பையில் டிசைன் பாடத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பின் கடந்த 2018ஆம் ஆண்டு தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார். இருப்பினும் அவருக்கு டிகிரி வழங் குவதற்கு நீதிமன்றத்தால் உத்தர விடமுடியாது என மறுத்து விட் டது. இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 142இன் கீழ் நமன் வெர்மா டிகிரி வாங்குவதற்கு தகுதியான நபர் என தீர்ப்பளித்தது. இன்னும் 4 வாரத் தில் இவருக்கு டிகிரி வழங்கப் பட்டிருக்க வேண்டும் எனவும் உத் தரவிட்டுள்ளது. 

இந்த தீர்ப்புமூலம் கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு கல்வி மறுக்கப்படாமல் வழங்கப் படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment