‘கடவுளின்' சக்தி இவ்வளவுதானா? கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

‘கடவுளின்' சக்தி இவ்வளவுதானா? கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

நாகர்கோயில், மே 18- நாகர்கோயில் மீனாட்சிபுரத்தில் இருந்து ஒழுகின சேரி செல்லும் சாலையில் வள்ளி யாமடத்து இசக்கியம்மன் கோயில் உள்ளது. 16.5.2022 அன்று கோயில் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று (17.5.2022) காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலின்  உண்டியல் உடைக்கப் பட்டிருந்தது. அதனையடுத்து வட சேரி காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். கோயிலில் இருந்த கண்காணிப்பு (சி.சி.டி.வி.) காமிராவின் காட்சிப் பதிவுகளை ஆய்வு மேற்கொண் டனர். அப்போது கொள்ளையன் கோயிலில் உண்டியலை உடைக் கின்ற காட்சி தெரிய வந்தது.

அந்த பதிவுகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த கோயிலில் 2 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்படும். கடந்த ஒரு மாதத் திற்கு முன்பு தான் கோயிலில் திரு விழா நடந்தது. எனவே உண்டிய லில் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பணம் இருந்திருக்கும் என்று கூறப்படுகி றது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள்.

சர்வ சக்தி கொண்ட கடவுளர் களுக்கு கோயிலில் உண்டியல் திருட்டைக்கூட தடுக்கமுடியவில் லையா? எல்லாம் அவன் செயல் என்றால் உண்டியல் திருட்டும் கட வுள் செயல்தானோ? காவல்துறை நடவடிக்கை யார்மீது எடுப்பதாம்?

No comments:

Post a Comment