புதுக்கோட்டை கர்ப்பிணிக்கு சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளிலிருந்து கொண்டு செல்லப்பட்ட அரியவகை குருதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 13, 2022

புதுக்கோட்டை கர்ப்பிணிக்கு சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளிலிருந்து கொண்டு செல்லப்பட்ட அரியவகை குருதி

சென்னை,மே 13- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் 

2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அவருக்கு தீவிர குருதிச் சோகை இருந்ததால் கடந்த 5ஆம் தேதி அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப்பட் டுள்ளார். 

அங்கு அவருக்கு கருசிதைவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு கடந்த 6 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அவ ருக்கு உடனடியாக குருதி செலுத்த வேண்டியிருந்த நிலையில் அவ ருக்கு மேற்கொள்ளப்பட்ட குரு திப் பரிசோதனையில் 10 லட்சம் பேரில் நால்வருக்கு மட்டுமே இருக்கும் அரிய வகையான ‘பாம்பே குரூப்’  குருதி அந்தப் பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்தது. மேலும் மகப்பேறு மருத் துவ குழுவினர், அவருக்கு தீவிர குருதி சோகை இருப்பதை உறுதி செய்ததுடன், சிறுநீரக கோளாறு இருப்பதை கண்டறிந்தனர்.  எனவே, அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவக் கல்லூரி முதல் வர் பூவதி வழிகாட்டுதலின்படி சிகிச்சைமுறை வகுக்கப்பட்டது. மேலும், மருத்துவர் குழுவினர் அரிய ‘பாம்பே குரூப்’ குருதி தமிழ் நாட்டில் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருப் பதை அறிந்து, பல்லவன் ரயில் மூலம்  குருதியை விரைவாக கொண்டு வந்து அந்தப் பெண் மணிக்கு செலுத்தினர்.

அந்தப் பெண்மணிக்கு டயாலிசிஸ் மேற்கொள்ள இரண்டாவது யூனிட் குருதி தேவைப்பட்டதால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையில் இருந்து கார் மூலமாக புதுக்கோட்டைக்கு கொண்டு வந்து  செலுத்தப்பட்டது. தற் போது அப்பெண்மணியின் உடல் நலத்தில் முன்னேற்றம் கண்டு வருகிறார். இந்நிலையில், உரிய நேரத்தில் சரியான முறையில் அரியவகை ‘பாம்பே வகை’ குருதி 2 யூனிட்டுகள் ரத்தசோகை சரி செய்வதற்கு கிடைத்திட விரைந்து செயல்பட்ட குருதி  வங்கி குழுவி னரையும் நோயாளிக்கு சிறப்பான சிகிச்சை அளித்த மகப்பேறு மற்றும் மருத்துவ குழுவினரையும் மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி பாராட்டினார். மேலும் கர்ப் பிணிப் பெண்ணுக்கு அரியவகை குருதியை ரயில் மூலம் சென் னையில் இருந்து வரவழைத்து உடனடியாக செலுத்தி அவரின் உயிரை காத்த புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு பொதுமக்களி டையே பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பாம்பே குரூப்’ குருதி

இந்த குருதிப் பிரிவை, 1952-ஆம் ஆண்டு பம்பாயில், டாக்டர் பெண்டே  (Dr. Y. M. Bhende) என் பவர்தான் முதன்முதலில் கண்ட றிந்தார். இந்த வகை முதன்முதலில் கண்டறியப்பட்டது பம்பாயில் என்பதால், இந்த 'பிபி' குருதிப் பிரிவு, 'பாம்பே குரூப்' என்று அழைக் கப்படுகிறது. பத்து லட்சம் பேர் களில் நால்வருக்குத்தான் இந்த குருதி வகை இருப்பதாக மருத்து வர்கள் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment