5000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 13, 2022

5000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்

 விழுப்புரம், மே13 - விழுப்புரம்  - செஞ்சி சாலையில் அமைந்துள்ள முட்டத்தூரிலுள்ள மலையில் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்  செங்குட் டுவன் தலைமையில் முட்டத்தூர் கிராம இளை ஞர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பாதை வசதி  இல்லாத கரடு முரடான பாறைகளின் மீது இவர்கள் 2 மணி நேரம் பயணம்  மேற்கொண் டனர். சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் வழுவழுப்பான சமதளப் பாறை  இருந்தது. அதற்கு அருகில் இருக்கும் பாறையில் சிகப்பு வண்ண ஓவியங்கள்  இருப்பது கண்டறியப் பட்டன. இதுகுறித்து, செங்குட்டுவன் கூறுகை யில், பாறைக்கு  உட்புறத்தில் அடர் சிவப்பு நிறத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டு இருக்கின் றன.  மனித உருவம் மற்றும் விலங்கு போன் றவை இதில் இடம் பெற்றுள்ளன. கால  மாற்றத் தால் பல இடங்களில் ஓவியங்கள் தெளி வில்லாமலும் சிதைந்தும் உள்ளன.

இந்த  ஓவியங்கள் குறித்து மூத்த கல்வெட்டு ஆய்வாளரும் கீழ்வாலை பாறை ஓவியங் களைக்  கண்டறிந்தவருமான அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது,  “இந்த  ஓவியத் தொகுப்பில் மனிதர்கள் குழுவாக இருக்கின்றனர். வேட்டைச் சமூகமாக  இருந்த போது விலங்குகளை எதிர்த்துப் போரிடுவதற் கானப் பயிற்சியை இவர்கள்  மேற்கொள்கின் றனர். இதில் விலங்கின் உருவமும் இடம் பெற் றுள்ளது.  இந்த ஓவியங்கள் 5000 ஆண்டு களுக்கு முற்பட்டதாக இருக்கலாம்” எனத்  தெரிவித்திருப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment