சவுக்கு மரத்தில் இருந்து குளிர் நிழலை எதிர்பார்க்க முடியாதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 23, 2022

சவுக்கு மரத்தில் இருந்து குளிர் நிழலை எதிர்பார்க்க முடியாதே!

பாணன்

1937இல் ராஜாஜி பதவி ஏற்றார்.  அவர் பிறந்த ஊர் இன்று கிருஷ்ணகிரி மாவட்டமாக இருந்தாலும் அன்று அது சேலம் ஜில்லாவாக இருந்தது. சேலம் ஜில்லாவில் மட்டும் மது விலக்கை அமல்படுத்தினார்.

 இந்த நடவடிக்கைக்குக் புகழாரம் சூட்டலாம் என்பது போல் இருந்தாலும் அதன் பின்னால் இருக்கும் மோசடியை உணர்ந்த ஒரே ஒருவர் தந்தை பெரியார்தான். 

 மதுவிலக்கு என்னும் மயக்க பிஸ்கட்டை தந்துவிட்டு அடிப்படை உரிமைகளை பறிக்கும் வேலையில் திட்டமிட்டு இறங்கினார் ராஜாஜி. மதுவிலக்கைக்கொண்டு வந்தால் அரசுக்கு ரூ.30 லட்சம் வருமான இழப்பு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 6000 ஆரம்பப் பள்ளி களை ஆசிரியர்களுக்கு ஊதியமாக கொடுக்க முடியவில்லை என்று மூடக் கூறினார்.

அதுவுமில்லாமல் அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் கொடுக்க நிதி இல்லை; ஆகையால் அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படித்து வேலையில்லாமல் இருக்கும் மருத்துவர்களை ஊதியமில்லாத கவுரவ மருத்துவர்களாக நியமித் தார்.

கிராமப்பள்ளிகளுக்குக் கொடுத்த அரசின்  நிதியையும் தடைசெய்தார்.. இதை துவக்கத்தி லேயே புரிந்துகொண்டார் தந்தை பெரியார். 

சேலம் ஜில்லாவில் மதுவிலக்குக் கொண்டு வந்து நல்லபேர் வாங்க தமிழ்நாடு முழுவதும்  ஏழைகளின் கல்வியிலும், அவர்கள் போகும் அரசு மருத்துவமனையிலும் கைவைக்கவேண் டுமா என்று முண்டாசு கட்டிக் களமிறங்கினார் தந்தை பெரியார். 

ராஜாஜி செய்ததில் இன்னொரு உள்குத்தும் இருந்தது. அன்றைக்கு 99 விழுக்காடு மருத்து வர்கள் பார்ப்பனர்கள் தான். அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த அரசு மருத்துவ மனையில் பயிற்சியாளர்களுக்கு அடித்த  ஆர்டர் தான் அது. 

ராஜாஜியின் செயல்பாட்டில் மற்றொரு நன் மையும் பார்ப்பனர்களுக்கு இருந்தது, அன்றைய காலகட்டத்தில் 99 விழுக்காடு மருத்துவர்கள் பார்ப்பனர்களாக இருந்தனர். அவர்கள் அனை வருக்கும் வேலை கொடுக்கும் வகையில் தான் இந்த தந்திர வேலையைச் செய்தார்.

அதே போல 99% ஆசிரியர்கள் பார்ப்பனர்கள் தான். இன்று உள்ளது போல் அன்று வீதிக்கொரு பள்ளி ஊருக்கொரு கல்லூரி கிடையாது. 100 நபர்களில் 8 நபர்கள் படித்தவர் என்றால் அதில் 6 பேர் பார்ப்பனர்கள் மட்டுமே

ஆரம்பப்பள்ளிகளே பல ஊர்களுக்கு ஒரே ஒரு பள்ளிமட்டும் தான்

உயர்நிலைக் கல்விகற்க நகரங்களுக்கு மட்டுமே செல்லவேண்டிய நிலை

பார்ப்பனர் ஆசிரியர்கள் மீது கருணை காட்டிய ராஜாஜி பல கிலோமீட்டர் போய் ஏன் சொல்லித்தரவேண்டும் என்று கூறி கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்த பள்ளி களை இழுத்து மூடினார்.

தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளி களுக்கே செல்ல முடியாத சூழலில் நகரங்களுக்குச் சென்று படிப்பது எப்படி? இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கல்வியை விட்டு விவசா யத்திற்குத் திரும்பினர். 

அதை விட மோசமான முடிவு ஹிந்தி

அதுவும் நகர்புற பள்ளிகளில் 6,7,8 வகுப்பு களுக்கு மட்டும்.. ஹிந்தியில் தேர்ச்சி பெற்றால் தான் அடுத்த வகுப்புக்கே போக முடியும் என்ற ஆணை!

அதாவது ஆரம்ப பள்ளிக்கூடங்கள மூடிபாதி பேரை கல்வியிலிருந்து விரட்டியாகிவிட்டது, மீதம் தப்பித்தவறி படிச்சு நகர்ப்புறம் ஆறாம் வகுப்புக்குப் போகிறவர்கள் ஆங்கிலத்தோடு சேர்ந்து மூன்றாவது மொழியாக ஹிந்தியை எப்படி கற்பார்கள்? அதுவுமில்லாமல் இதிலும் ராஜாஜி யின் சுயலநம் இருந்தது காரணம் - 100க்கு 100 ஹிந்தி ஆசிரியர்கள் அவாள்கள் தான். ஆகை யால் அத்தனை ஹிந்தி ஆசிரியர்களுக்குப் அரசுப்பணி.

 தந்தை பெரியார் எதிர்காலத்தில் வரவிருக்கும் பெரும் ஆபத்தை உணர்ந்தார். தமிழர் தலை வர்கள் அனைவரையும் ஒரே மேடையில திரட்டி ஹிந்தி எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டி எழுப்பினார். அதுவெறும் ஹிந்தி எதிர்ப்பு அல்ல, இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கட்டிய அரண். அந்த அரணைத்தாண்டி தமிழ்நாட்டிற்குள் இன்றுவரை ஆரியக் கூத்தாடிகளால் வரமுடி யாமல் "நானும் திராவிடன் நானும் திராவிடன்" என்று கூத்தாடிக் கொண்டு இருக்கிறார்கள்

ராஜாஜியைப் பற்றி பார்ப்பன ஊடகத்தினர் ஆயிரம் புகழாரம் சூட்டுவார்கள் அதற்குக் காரணம் அவர் சிந்தனை முழுவதும் பார்ப் பனியம் என்பதால் மட்டுமே!

இருப்பினும் எப்படி மதுரையின் சித்திரைக் கோடையில் சவுக்கு மரத்தில் நிழலைத்தேட முடியாதோ அது போலத்தான் ராஜாஜியின் திட்டங்களில் நமக்கான நலனையும் எதிர் பார்க்க முடியாது.

No comments:

Post a Comment