இனமலரின் பார்ப்பன ஈனப்புத்தி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

இனமலரின் பார்ப்பன ஈனப்புத்தி!

' விடுதலை' நாளிதழ் மே 15 அன்று வெளியான விஜயபாரதம்- தினமலர்' கும்பல் பரப்பும் செய்தி உண்மையா? - கட்டுரை வாசித்தேன், 

தவளை தன் வாயால் கெடும் என்பதற்கு உதாரணம் விஜய பாரதம், தினமலர் ஏடுகள். உலகிலேயே தான் ஒருவர் மட்டும் தான் யோக்கியன் என்ற நினைப்பு இன ஈனமலருக்கு, உண்மையின் உரைகல்லாம் ஈனமலர். 

உண்மைகளை மறைப்பது, உருவாக்குவது மற்றும், தன் சொந்த கருத்தை பொதுக் கருத்து போல வெளியிடுவது, வாசகர்கள் (யோக்கியர்கள்)எழுதும் கடிதங்களில் உண்மைப் பெயர் இல்லாமல், புனைப் பெயர் என்ற பெயரில் தாமே வெளியிட்டு தனது பூணூலை சரிசெய்து கொள்கிறது. 

பல்லக்கில் பெரியார் பவனி என வெளியிட்ட இனமலர் அறிவு இருந்தால், துணிவு இருந்தால், உண்மை இருந்தால் அந்நிகழ்வு எப்பொழுது நடைபெற்றது என்பதை தெளிவாக வெளியிட்டு இருக்க வேண்டும். 

பெரியார் பல்லக்கு என்ற இந்த செய்தி ஒன்றிலே உடைபட்டுபோய்விட்டது இனமலரின் உண்மையின் உரைகல். மாறாக இனமலரை படித்து மக்கள் பெரியார் மீது எதிர்ப்பு என அறிந்து கொள்வார்கள் என்ற நினைப்பு.  

எதையும் ஆதாரத்தோடு, உறுதித் தன்மையோடு விளக்குவது தான் திராவிடர் கழகத்தின் பணி, 'விடுதலை' யின் பணி. எனவே எங்களிடம் உங்கள் பார்ப்பன ஈனப்புத்தி( பின்புத்தி வேலை) எடுபடாது. 

தருமபுர ஆதினம் பல்லக்கு விவகாரத்தில் பார்ப்பன இனமலர், விஜய பாரதம், துக்ளக், தினமணி பார்ப்பன ஏடுகள் மூக்கை நுழைப்ப தற்கு முதற் காரணம், எங்கே நாளைக்கு நமக்கும் எதிர்ப்பு வந்திடுமோ என்ற பூணூல் எண்ணம் தானே தவிர, வேறொன்றுமில்லை. 

ஹிந்து கடவுள்களின் ஊர்வலத்தில், (சூத்திரன் சுமக்க )பார்ப்பனர்கள் தானே அமர்ந்து வருகின்றனர். அதற்கு பாதிப்பு வந்திடுமோ என்ற பார்ப்பன புத்தி தான், சூத்திர ஆதினத்தின் பல்லக்கு விவகாரத்தை ஆதரிக்கிறது. 

பார்ப்பான் எப்படியோ சூத்திரனை வைத்தே காலத்தை ஓட்டுகிறான், ஆனால் சூத்திரனோ பார்ப்பனர்களுக்கு குடை பிடிக்கிறான், வெட்ககேடு!

பட்டினப் பிரவேசத்தை உலகறியச் செய்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி என மதுரை ஆதினம் தம்பட்டம் அடித்துள்ளார். இது ஏதோ திராவிடர் கழகத்துக்கு சறுக்கல் என்றும், தங்களுக்கு வெற்றி என எண்ண வேண்டாம். 

நாங்கள் ஒருபோதும் உங்களை போல வீதியில் நடமாட விடமாட்டோம் என வன் முறையில் ஈடு படுவது, இறங்குவது  கிடையாது. அனைவரும் ஒன்றே, அனைவருக்கும் உரிமை, சமத்துவ ஒற்றுமை இவற்றுக்காக திராவிடர் கழகம் போராடி வருகிறது. அதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை. 

இனமலரில் வந்த பெரியார் பல்லக்கு என்ற பொய்ச் செய்திக்கு எதிராக கழகம் உண்மைச் செய்தியை  ('விடுதலை' நாளிதழில் வந்த செய்தியை) துண்டறிக்கை ஊடகங்கள் வாயிலாக அதிக அளவில் பரப்ப வேண்டும்.  

- மு.சு. அன்புமணி

மதுரை 625020. 


No comments:

Post a Comment