மதக்கலவரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவாரா அமித்ஷா? ராஜஸ்தான் முதல்வர் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

மதக்கலவரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவாரா அமித்ஷா? ராஜஸ்தான் முதல்வர் கேள்வி

ஜெய்ப்பூர், மே.18 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தைரி யம் இருந்தால் மதக்கலவரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் சவால் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜெய்ப்பூரில் செய் தியாளர்களிடம்  பேசிய போது அவர் அமித்ஷாவிற்கு சவால் விட் டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாடு முழுவதும் ஒருவிதமான அசாதாரண சூழல் நிலவி வருகிறது. எங்கு பார்த்தாலும் மதக்கலவரங் களும், வகுப்புக் கலவரங்களும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் 7 மாநிலங்களில் பயங்கர கலவரங்கள் நடை பெற்றன. டில்லி யில் அனுமன் ஜெயந்தி விழாவில் வன்முறை உருவானது. வேறொரு மாநி லத்தில் ராம நவமி விழாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது தாக் குதல் நடத்தப்படு கிறது. ஆனால், இந்த மதக் கலவரங்களை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தை கூட பேசுவ தில்லை.

மத ரீதியிலான கலவரங்களை அவர் மவுனமாக வேடிக்கை பார்க்கிறார். இதற்கு என்ன காரணம்? இந்தக் கலவரங்கள் குறித்து விரிவான விசாரணை ஏதும் நடத்தப்படுவ தில்லை. இதற்கான உத்த ரவுகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறப் பிப்பதில்லை. இந்தக் கலவ ரங்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள், எந்தக் கட்சி இதன் மூலம் ஆதாயம் பெறு கிறது என்பதை விசாரணை நடத்தினால் தானே தெரிந்து கொள்ள முடியும்? ஒரு குறிப் பிட்ட கட்சியே இதுபோன்ற கலவரங்களை அரசியல் ஆதாயங் களுக்காக துண்டிவிட்டு வருகிறது.  எனவே நாட்டில் நிகழும் மதம் மற்றும் வகுப்புக் கலவ ரங்கள் குறித்து உரிய விசார ணைக்கு ஒன்றிய அரசு உத்தர விட வேண்டும்.

அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இந்த உத்தரவை அவர் பிறப் பிக்கட்டும். இவ்வாறு அசோக் கெலாட் கூறினார்.

No comments:

Post a Comment