இந்தியாவில் 30 சதவீத பெண்கள் உடல் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிப்பு குடும்ப நல ஆய்வறிக்கையில் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 10, 2022

இந்தியாவில் 30 சதவீத பெண்கள் உடல் மற்றும் பாலியல் வன்முறையால் பாதிப்பு குடும்ப நல ஆய்வறிக்கையில் தகவல்

புதுடில்லி, மே 10- இந்தியாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பெண்கள் உடல் ரீதியான அல்லது பாலியல் வன் முறையை அனுபவித்திருக்கிறார்கள் என்று தேசிய குடும்ப நல ஆய்வு-5 அறிக்கை கூறுகிறது. நாட்டில்  18 முதல் 49 வயதுக்குட்பட்ட 30% பெண்கள் 15 வயது முதல் உடல் ரீதியான வன்முறையை அனுபவித்துள்ளனர்.

மேலும், 6% பேர் தங்கள் வாழ்நாளில் பாலியல் வன் முறையை அனுபவித்துள்ளனர். இந்த அறிக்கையை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்ட்வியா வெளியிட்டுள்ளார்.

திருமணமான பெண்களில் 32% (18-49 வயது) உடல், பாலியல் அல்லது துணையின் பாலியல் வன்முறையை அனுபவித்ததாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது. வாழ்க்கைத் துணை வன்முறையின் மிகவும் பொதுவான வகை உடல்ரீதியான வன்முறை (28%) ஆகும், அதைத் தொடர்ந்து உள்ளம் மற்றும் உடல் ரீதியிலான பாலியல் வன்முறை.களும் இடம் பெறுகின்றன.

ஆனால், நாட்டில் 4% ஆண்கள் மட்டுமே குடும்ப வன்முறை வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை கருநாட காவில் 48% என அதிகமாக உள்ளது, அதைத் தொடர்ந்து பீகார், தெலங்கானா, மணிப்பூர்  மாநிலங்கள் உள்ளன. லட்சத் தீவுகளில் குடும்ப வன்முறை 2.1% என்ற அளவில் குறைவாக உள்ளது.  

நகர்ப்புறங்களில் உள்ள பெண்களு டன் ஒப்பிடும்போது (24%) கிராமப்புறங்களில் உள்ள பெண்களிடையே (32%) உடல்ரீதியான வன்முறை மிகவும் பொதுவாக அதிகமாக உள்ளது. அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குற்றவாளிகளான ஆண்களிடையே அதிகரித்த பள்ளிப் படிப்பு மற்றும் செல்வம் காரணமாக பெண்களின் வன் முறை அனுபவம் குறைந்து வருகிறது.

பள்ளிப்படிப்பை முடித்த 18% பெண்களுடன் ஒப்பிடுகையில், பள்ளிப்படிப்பு இல்லாத 40% பெண்கள் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. உடல் ரீதியான வன்முறையின் அனுபவம், மிகக் குறைந்த செல்வம் உள்ள பெண்களி டையே 39% மற்றும் உயர்ந்த செல்வம் உடையவர்களி டையே 17% வரை இருக்கும்.

பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான வன்முறைகளில் 80% வழக்குகளில், குற்றவாளி கணவர்தான். 12 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பள்ளிப்படிப்பை முடித்த கணவர்கள், பள்ளிப்படிப்பு இல்லாதவர்களை விட (43%) உடல், பாலியல் அல்லது எமோஷனல் வன்முறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் பாதியாக (21%) உள்ளது.  

இவ்வாறு அறிக்கை கூறுகிறது. 

18-19 பிரிவினரை விட 40-49 வயதுடைய பெண்கள் அதிக வன்முறையை அனுபவிப்பதாக அறிக்கை கண் டறிந்து உள்ளது.


No comments:

Post a Comment