பசியைப் பொசுக்கும் லேசர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

பசியைப் பொசுக்கும் லேசர்!

உணவின் அளவைக் குறை; உடற்பயிற்சி நேரத்தை கூட்டு. இப்படித்தான், உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு அறிவுரை தரப்படுகிறது. ஆனால், அதைக் கடைப்பிடிப்பதில் தான் சிக்கல் உள்ளது. எனவே, வயிற்றுப் பகுதியிலேயே நேரடியாக சிகிச்சை செய்யலாம் என்கின்றனர், தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள்.

வயிற்றின் உட்பகுதியில், உணவு நுழைவாயில் அருகே, பசி உணர்வைத் தரும் செல்கள் உள்ளன. 

இவை சுரக்கும் 'கிரெலின்' என்ற ஹார்மோனால் தான் நமக்குப் பசிக்கிறது.அதிகம் சாப்பிடத் துண்டுவதும், கொழுப்பை உடலில் சேமிக்கத் துண்டுவதும் கிரெலின் தான். 

இதே ஹார்மோன், மூளை, கணையம் மற்றும் சிறு குடல் பகுதிகளிலும் சுரக்கின்றன. என்றாலும், பெரும்பகுதி கிரெலினை வயிற்றிலுள்ள செல்களே உற்பத்தி செய்கின்றன.

தென்கொரியாவின் கத்தோலிக்க பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வயிற்றினுள் ஒரு குழாய் மூலம் லேசர் கருவியை செலுத்தி, கிரெலின் செல்களின் ஒரு பகுதியை பொசுக்கினால் பசி குறையும் என்று கண்டறிந்தனர்.

இந்த சோதனையை பன்றிகள் மீது செய்த போது, நல்ல பலன் கிடைத்தது. ஆனால், ஒரு வாரத்திற்குப் பிறகு, கிரெலின் செல்கள் மீண்டும் வளர்ந்தன. 

இதனால், இந்த சிகிச்சையை மீண்டும், மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். 

இந்த சிகிச்சையை மனிதர்களுக்கு செய்து பரிசோதிக்க, தென்கொரிய விஞ்ஞானிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment