கார்பன் மாசை உறிஞ்சும் பிளாஸ்டிக் பொடி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 28, 2022

கார்பன் மாசை உறிஞ்சும் பிளாஸ்டிக் பொடி!

கணக்கில்லாமல் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் ஒரு புறம். புகை மாசால் காற்றில் டன் கணக்கில் கலக்கும் கார்பன்டையாக்சைடு மறுபுறம். இரண்டுமே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவை.ஆனால், பிளாஸ்டிக்கை வைத்து கார்பன் மாசைக் குறைக்கும் புரட்சிகர நுட்பத்தை, அமெரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

ரைஸ் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், வீணாகும் பிளாஸ்டிக்கை, பொட்டாசியம் அசிடேட் போன்ற சில வேதிப் பொருட்களுடன் கலந்து, சூடேற்றி, மிகவும் நுண் துளைகள் கொண்ட பொடியாக மாற்றுகின்றனர். இந்தப் பொடி, காற்றில் உள்ள கார்பன்டையாக்சைடு மூலக்கூறுகளை உறிஞ்சும் தன்மை கொண்டது.

இப்படி உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பொடித் துணுக்கு, அறை வெப்பத்தில் அதன் எடையை விட 18 சதவீதம் கூடுதலான எடையுள்ள கார்பனை உறிஞ்சும் திறன் கொண்டது. அப்படி உறிஞ்சிய பொடிகளை சூடேற்றினால் வெளியேறி விடும். அதை எரிபொருளாகவோ, கட்டடப் பொருளாகவோ பயன்படுத்த முடியும்.

மீந்திருக்கும் பிளாஸ்டிக் துகள்களை, மீண்டும் கார்பனை உறிஞ்ச பயன்படுத்தலாம் என ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.வீணாகும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை, காற்று மாசைக் குறைக்கப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் நிச்சயம் பாராட்டத்தக்கது தான்.

No comments:

Post a Comment