ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 15ஆம் ஆண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 10, 2022

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 15ஆம் ஆண்டு விழா

தந்தை பெரியாரின் கொள்கைகள் நம்மையும், நம் மாநிலத்தையும் காத்து நிற்கிறது

போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பெருமிதம்

ஜெயங்கொண்டம், ஏப். 10- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யின் 15ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத் தில் 9.4.2022 அன்று மாலை 6.30 மணியள வில் தொடங்கியது.  விழாவிற்கு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க, பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் தலைமை யில் பள்ளி முதல்வர் சசீதா முன்னிலையில் விழா சீரும் சிறப் புமாக நடைபெற்றது.

நிகழ்விற்கு வருகை தந்தோரை பள்ளி தாளாளர். வீ.அன்புராஜ் அவர்கள் வர வேற்று வரவேற்புரையாற்றினார். பள்ளி முதல்வர் ச.சீதா அவர்கள் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்து அளித்தார்.

விழாவில் பேசிய தமிழ்நாடு போக்கு வரத்துத்துறை அமைச்சர்.எஸ்.எஸ்.சிவ சங்கர் அவர்கள் “ஒரு மிக சிறப்பான நிகழ்ச்சியை மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு 15-ஆம் ஆண்டு விழாவாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கும், பள்ளி முதல் வர் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். உள்ளபடியே இந்த விழா வில் கலந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சிய டைகிறேன். விழாவில் மாணவர்கள் நிகழ்த் திய தந்தை பெரியாரின் கொள்கைகளை விளக்கும் நாடகமும், கொம்புடன் நமது பெண் குழந்தைகள் நிகழ்த்திய நடனம் பெண் விடுதலைக்கும், உரிமைக்கும் குரல் கொடுப்பதாக இருந்தது.

கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நடைபெறும் இன்றைய நிகழ்வில் பெருந் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு நன்றி.

இந்த மகத்தான வேலையில் பெண் விடுதலைக்காக, அறிவு விடுதலைக்காக, சமூக விடுதலைக்காக, ஒடுக்கப்பட்ட, தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் விடு தலைக்காக, சமூகநீதி காக்கப் போராடிய தந்தை பெரியாரின் பெயரைத் தாங்கி மிளிரும் இப்பள்ளியின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.

ஏனென்றால் தந்தை பெரியாரின் கொள்கைகள் இன்றைக்கும் தேவையாக இருக்கிறது என்பதை மிகத்தெளிவாக இன்றைய அரசியல் நமக்கு உணர்த்துகிறது என்றால் மிகையல்ல, குறிப்பாக வட மாநிலங்களில் நடைபெறும் அரசியலுக்கும், தென் மாநிலங்களில் நடைபெறும் அரசிய லையும் உற்றுநோக்கினால், தெளிவாகப் புரியும், தந்தை பெரியாரின் கொள்கைகள் நம்மையும், நம் மாநிலத்தையும் எவ்வாறு காத்து நிற்கிறது என்பதும் நமக்குத் தெளி வாகவே புரியும். எனவே, அவரது கொள் கைகளை  என்றைக்கும் மனதிலே தாங்கி நடக்க வேண்டியது நமது ஒவ்வொருவர் கடமையாகும். இரண்டே வார்த்தைகளில் சொன்னால் “மானமும், அறிவும் மனி தர்க்கு அழகு” என்ற அவரின் தாரக மந்தி ரத்தை மனதில் இருத்தி செயல்படும் செயல் வீரராக நமது தமிழ்நாடு முதல மைச்சர் தளபதி.மு.க.ஸ்டாலின் அவர்கள் செயலாற்றி வருகிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்த தந்தை பெரியாரால் தான் இன்று நாம் தமிழர் களாகப் பெருமையோடு நடை போடுகி றோம். சுயமரியாதையை மனதில் நிறுத்து வதோடு மட்டுமல்ல, அதை இது போன்ற நிகழ்வுகள் மூலம் இளைய சமுதாயமான மாணவர்களிடம் எடுத்து செல்லும் இந்த பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர் கள் மற்றும் இதற்கு ஒத்துழைப்பு தரும் பெற்றோர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment