பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையின் பன்னாட்டு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 22, 2022

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையின் பன்னாட்டு கருத்தரங்கம்

வல்லம், மார்ச் 22 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் இரண்டு நாட்கள் (16.03.2022 & 17.03.2022) பன்னாட்டு கருத்தரங்கம் கணித துறையின் சார்பாக "கணித அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இவற்றில் வளர்ந்து வரும் போக்கு கள்'' என்ற தலைப்பில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் முனைவர் எஸ். புவனேஸ்வரி, துறைத்தலைவர், கணிதத்துறை வரவேற்புரை யாற்றினார். அதனை தொடர்ந்து இந்த கருந்தரங்கை முனைவர். எஸ். வேலுச்சாமி, துணைவேந்தர் தொடக்க உரையாற்றினார். முனைவர் டேவிட் நாக ரெத்தினம், தென் கொரியா அவர்கள் சிறப்புரை யாற்றினார். 

மேலும் இந்நிகழ்வில் முனைவர் அ.ஜார்ஜ், முதன் மையர் (கல்வி புலம் ) மற்றும் முனைவர் பி. விஜய லெட்சுமி முதன்மையர் கலந்து கொண்டு சிறப்பரை யாற்றினார்.

அதனை தொடர்ந்து முனைவர் சுன் கில் பார்க், கொரியா, முனைவர் எம். மாணிக்கவாசகம்,  முனை வர். வி.ராஜா சிறீதரன், மொராக்கோ, முனைவர் லுடிலு ஓஜிலா, பூனே, முனைவர் மார்ட்டின் எம்கண்டவயர், கனடா, முனைவர். எஸ். குமரன், முதன்மையர் ஆராய்ச்சி, முனைவர் எ. இ. நாரா யணன், துணை பேராசிரியர் மற்றும் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் முனைவர் சிறீவித்யா ஆகியோர் கலந்து கொண்டு வளர்ந்து வரும் ஆராய்ச்சி பற்றி பல்வேறு தலைப்புகளில் உரை யாற்றினர்.

இறுதி நிகழ்வாக 17.03.2022 அன்று மாலை அய்ந்து மணியளவில் முனைவர். பி. விஜயலெட்சுமி, முதன்மையர் நிறைவுரையாற்றினார். இதனை தொடர்ந்து கருந்தரங்கில் நடைப்பெற்று நிகழ்வினை உதவி பேராசிரியர் கே. இராஜேஸ்வரி, தொகுத்து வழங்கினார். இறுதியாக முனைவர் பி.சிறீதேவி நன்றியுரையாற்றினர்.

இந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் கணித்துறை பேராசிரியர்கள் அனை வரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment