குடிமைப் பணிகளுக்கான தேர்வெழுதுவோருக்கு இலவசப் பயிற்சி தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 22, 2022

குடிமைப் பணிகளுக்கான தேர்வெழுதுவோருக்கு இலவசப் பயிற்சி தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, மார்ச் 22- தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரும், பயிற்சித் துறையின் தலைமை இயக்குநரு மான இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

அகில இந்திய குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) தேர்வில் முதல் நிலை, முதன்மை தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு, சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் தமிழ்நாடு அரசால் நடத் தப்படும் பயிற்சி மய்யத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இங்கு 2021- - 2022இல் முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற்ற 80 பேரில் 12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 3 பேர் தமிழை விருப் பப் பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள். தேர்ச்சி பெற்றவர் களில் 2 பேர் பெண்கள், ஒருவர் மாற்றுத்திறனாளி.

தேர்வர்களுக்கு உணவு உறை விடத்துடன் கூடிய தனி அறை வழங்கப்பட்டு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. பயிற்சி மய்யத்தில் இருந்து தேர்வு மய்யத்துக்கு சென்று வர, சிறப்பு பேருந்து வசதி செய்யப் பட்டது. அனைத்து தேர்வர்களுக் கும் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.3,000 வழங்கப்பட்டது.

தற்போது இம்மய்யத்தில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு, பணி யில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவ லர்கள், தலை சிறந்த வல்லு நர்களால் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் தங்களது ஆளுமைத் தேர்வை சிறப் பாக எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும். அரசு மய்யத்தில் படித்தவர்கள் மட்டுமின்றி, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிற தேர்வர்களும், இந்த மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்கலாம். 

இதற்காக கட்ட ணம் ஏதும் செலுத்த தேவையில்லை. இதில் பங்குபெற விரும்புவோர், தங்களைப் பற்றிய விவரங்களை aicscc.gov@gmail.com  என்ற மின்னஞ்சல், 94442 86657 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது 044-24621909 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

மாதிரி ஆளு மைத் தேர்வுக்கான தேதி குறித்த விவ ரங்கள். பயிற்சி மய்ய இணைய தளத்தில் ( www.civilservicecoaching.com)  விரைவில் வெளியிடப் படும். இந்த மய்யத்தில் பயின்று தேர்வான தேர்வர்கள் ஆளுமைத் தேர்வுக்கு டில்லி செல்வதற்கான பயணச் செலவு தொகை யாக ரூ. 2,000 வழங்கப் பட்டு வந்தது. 

கடந்த ஆண்டு முதல் இது ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார். 

No comments:

Post a Comment