டீசல் விலையை அதிகப்படுத்திய ஒன்றிய அரசு: குழப்பத்தில் மாநில அரசுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 22, 2022

டீசல் விலையை அதிகப்படுத்திய ஒன்றிய அரசு: குழப்பத்தில் மாநில அரசுகள்

புதுடில்லி, மார்ச் 22 - உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை மனதில் வைத்து 4 மாதங்களாக எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படாமல் இருந்தது. உக்ரைன் - ரஷ்யா மோதலால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தினால் மக்களின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடும் என்ற நிலையில் ஒன்றிய அரசு சில்லரை விலையை உயர்த்தாமல் மொத்த விலையை உயர்த்தி மாநிலங்களின் தலையில் சுமையை ஏற்றி உள்ளது. 

சமீபகாலமாக சந்தையில்  கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. தவிர டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது  இந்த விலை ஏற்றம் மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படு கிறது. இந்த நிலையில் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்வோ ருக்கு லிட்டருக்கு ரூ.25 விலை உயர்த்தப்பட்டுள்ளது.  பல தொழிற்சாலைகளில் டீசல் மொத்தமாக டேங்கர் லாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இவர்களுக்கு விலை உயர்த்தப் பட்டுள்ளது. அதாவது தலைநகர் டில்லியில் டீசல் சில்லறை வி|ற்பனை விலையாக பங்குகளில் ரூ.86.67 உள்ள நிலையில் தொழிற் சாலைகளுக்கு மொத்தமாகக் கொள்முதல் செய்வோருக்கு ரூ.115 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா பரவலால் அறிவிக் கப்பட்ட ஊரடங்கால் பாதிப்புக்கு உள்ளான தொழிற்சாலைகளுக்கு இது மேலும் பாதிப்பை அளிக்கும் என தொழில் நடத்துவோர் தெரிவித்துள்ளனர்.  


No comments:

Post a Comment