தமிழ்நாட்டில் வருகிற 26ஆம் தேதி தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 22, 2022

தமிழ்நாட்டில் வருகிற 26ஆம் தேதி தடுப்பூசி முகாம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, பிப்.22 தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை 23ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் 3ஆம் பாலினத்தவர்கள் நடத்தும் சிற்றுண்டிஉணவகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இருக்கிற 3ஆம் பாலினத்தவர் அனைவரும் ஓட் டல் போன்ற புதிய உத்திகளுடன் கூடிய தொழில் முனைவோராக ஆக வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். அதேபோல் பொது மக்களும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். முதல்-அமைச் சரின் தீவிர நடவடிக்கையால் தமிழ் நாட்டில் கரோனா தொற்றின் அளவு ஆயிரத்திற்கும் கீழே குறைந் திருக்கிறது. மிக விரைவில் இந்த எண்ணிக்கை சுழியத்தை அடையும் என எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர் களின் எண்ணிக்கை 92 சதவிகி தத்தை எதிர்கொண்டு வருகிறது. 2ஆவது தவணை தடுப்பூசி 72 சதவிகிதத்தை நெருங்கிக்கொண் டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 9 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 169 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை (26ஆம் தேதி) 23ஆவது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளது.

தினந்தோறும் தடுப்பூசிகள் மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய மருத்துவமனைகளில் தடுப்பூசி போட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 100 சதவிகிதம் தடுப்பூசி போடுவதற்கு தமிழ்நாடு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். பேரிடர் காலத்தில் தடுப்பூசி ஒன்றுதான் நோயில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு உதவும்.

தனியார் தொழில் நிறுவனங் களின் சி.எஸ்.ஆர்.நிதி பங்களிப்பு டன் பல லட்சம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு பல வகைகளில் உதவியாக இருந் தார்கள். அதுபோல் தற்போதும் தடுப்பூசிகள் தனியார் மருத்துவ மனைகளில் நிலுவையில் இருப்ப தால், இலவச தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment