பொங்கல் பரிசு தொகுப்பு: தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை - முதலமைச்சர் அறிவுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 22, 2022

பொங்கல் பரிசு தொகுப்பு: தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை - முதலமைச்சர் அறிவுறுத்தல்

 

சென்னை, ஜன.22 பொங்கல் பரிசு தொகுப்புக்கு தரமற்ற பொருட்கள் வினியோகம் செய்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள் ளார். 

தமிழ்நாட்டில் பொங்கல் திரு விழாவை முன்னிட்டு பொதுமக்க ளுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் செய்யப் பட்டது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 21-.1-.2022 அன்று (நேற்று) நடைபெற்றது.

பொங்கல் பரிசுப் பொருட் கள் அனைத்தும் முறையாக திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம், சரியான விலைக்கு கொள்முதல் செய்யப் பட்டன; கடந்த ஆட்சிக் காலத்தில் 6 பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் 21 பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டன.

மேலும், தற்போது வழங்கப் பட்ட பொருட்களின் எண் ணிக்கை மட்டுமல் லாமல், அவை கூடுதல் எடையளவில் வழங்கப்பட்டுள்ள தும் குறிப் பிடத்தக்கது.

உடனுக்குடன் நடவடிக்கை

தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் நல்ல முறையில் நடைபெற்றிருந்த நிலை யில், மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கப் பட்ட பொருட் களில் சில குறை பாடுகள் இருந்ததாக புகார்கள் அரசுக்கு வரப்பெற்றன. 

இவற்றை விசாரித்து உட னுக்குடன் நடவடிக்கை எடுக்கப் பட்டது; உரிய தரத்துடன் பொருட் களை வழங்கத் தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

இதனைத் தொடர்ந்து, பரிசுத் தொகுப்பு வினியோகம் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். 

கருப்புப் பட்டியலில் சேர்ப்பு

விரிவான ஆய்வுக்குப் பின் னர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் பட வேண்டும் என்றும், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறு வனங்கள் மீது, கருப்புப் பட்டி யலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக் கைகளை எடுக்கவும் அறிவுறுத் தினார்.

பொதுமக்களுக்கு அனைத்து  வகை யிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங் கப்பட வேண்டும் எனவும், அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனு மதிக்க இயலாது எனவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமான தாகவும், உரிய எடையிலும் வினி யோகம் செய்யப் படுவதை அந்தந்த பகுதிகளி லுள்ள அரசு அலுவலர்கள் உறுதிப் படுத்திட வேண்டும் என்றும், தவறு செய் வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் நிதித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment